வளரும் குழந்தைகளின் உடலை வலுவாக்கவும் எலும்புகளை உறுதியாக்கவும் உதவும் ராகி ரொட்டி செஃப் தீனா ஸ்டைலில் எப்படி செய்வது என்று பார்ப்போம். இதுகுறித்து அவர் தனது யூடியூப் பக்கத்தில் செய்து காட்டியிருப்பதாவது,
தேவையான பொருட்கள்
கேழ்வரகு
சின்ன வெங்காயம்
வெங்காயம்
பச்சை மிளகாய்
கறிவேப்பிலை
கொத்தமல்லி தழை
முருங்கை இலை
கடலை பருப்பு
உப்பு
எண்ணெய்
இஞ்சி
துருவிய தேங்காய்
வறுத்த கடலை
பச்சை மிளகாய்
இஞ்சி
கடுகு
உளுத்தம் பருப்பு
காய்ந்த மிளகாய்
புளி
செய்முறை
ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி அது காய்ந்ததும் கடலைப்பருப்பு போட்டு சிவக்க விடவும். தட்டி போட்ட இஞ்சி நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.
கருவேப்பிலை, கொத்தமல்லித்தழை, நறுக்கிய முருங்கை கீரை சிறிது சேர்க்கவும். இவை அனைத்தையும் நன்கு வதக்கியதும் இதில் ராகி மாவை சேர்த்து சூடாக்கவும்.
பின்னர் இதை சிறிது நேரம் ஆறவிட்டு தண்ணீர் விட்டு பிசைந்து எடுத்துக் கொள்ளவும். பின்னர் இந்த மாவில் உப்பு போட்டு கரைத்து தண்ணீர் ஊற்றி பிசைய வேண்டும்.
கடைசியாக ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி மாவு மேலே எடுத்து உருண்டையாக எடுத்துக் கொள்ளவும். பின்னர் ஒரு தட்டில் வாழை இலை வைத்து எண்ணெய் தேய்த்து மேலே இந்த மாவை உருண்டையாக எடுத்து தோசை கல்லில் போட்டு எண்ணெய் ஊற்றி இரண்டு பக்கமும் வேகவிட்டு எடுக்கவும். அவ்வளவு தான் ராகி ரொட்டி ரெடி.
இந்த ராகி ரொட்டி, தேங்காய் சட்னி செஞ்சா அசத்திடுவீங்க! ராகி ரொட்டி & சட்னி | செஃப் தீனாவின் சமையலறை
இப்போது தேங்காய் சட்னி செய்ய ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய், பொட்டுக்கடலை, கொத்தமல்லி, கருவேப்பிலை, பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், புளி போட்டு சிறிது உப்பு தண்ணீர் விட்டு மைய அரைத்துக் கொள்ளவும்.
பின்னர் இதனை தாளிப்பதற்கு எண்ணெய், கடுகு, கருவேப்பிலை, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய் போட்டு தாளித்தால் அவ்வளவுதான் தேங்காய் சட்னி ரெடி ஆகிவிடும்.