ராகி சத்தான உணவாகும். ஆரோக்கியமான உணவு சாப்பிடுவது உடல் நலத்திற்கு நல்லது. ஸ்நாக்ஸ் ரெசிபியும் சத்து நிறைந்ததாக சாப்பிடலாம். அந்த வகையில் ராகி சேமியா வெஜ் கட்லெட் செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
ராகி சேமியா - 100 கிராம்
உருளைக்கிழங்கு - 3
கேரட் - 1
வெங்காயம் - 1
கரம் மசாலாத்தூள், மஞ்சள் தூள், உப்பு, மிளகாய்த்தூள் - தேவையான அளவு
பொடித்த வேர்க்கடலை - 4 டீஸ்பூன்
சோம்பு - 1/4 டீஸ்பூன்
எண்ணெய் - 50 கிராம்
மைதா - 4 டேபிள்ஸ்பூன்
கொத்தமல்லி - சிறிதளவு
செய்முறை
முதலில் உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்து எடுத்துக் கொள்ளவும். கேரட்டை துருவிக்கொள்ளவும். வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். இப்போது ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, தண்ணீர், சிறிது உப்பு சேர்த்து கலக்கவும். அடுத்து மசித்த உருளைக்கிழங்கு, கேரட், வெங்காயம், மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், சோம்பு, பொடித்த வேர்க்கடலை, கொத்தமல்லி சேர்த்து நன்கு பிசைந்து சிறு உருண்டைகளாக பிடித்த எடுக்கவும். அடுத்து உருண்டையை கட்லெட்டிற்கு ஏற்றார் போல் தட்டையாக தட்டவும், ராகி சேமியாவை மிக்ஸியில் போட்டு பொடித்து எடுத்து தனியாக வைக்கவும்.
இப்போது அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கட்லெட் கலவையை பொடித்த ராகி சேமியாயில் போட்டு பிரட்டி, எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். அவ்வளவு தான், சுவையான ராகி சேமியா வெஜிடபிள் கட்லெட் ரெடி.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/