ராகியில் மிக்சர் ஸ்நாக்ஸ் ரெசிபி செய்வது குறித்து பார்ப்போம்.
தேவையானவை
ராகி மாவு – 2 கப்
வேர்க்கடலை – 1/4 கப்
மிளகாய்த்தூள்- 4 ஸ்பூன்
பொட்டுக்கடலை – 1/4 கப்
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை
முதலில் ராகியை அரைத்து மாவாக்கிக் கொள்ளவும். அதை ஒரு பாத்திரத்தில் போட்டு தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்து முறுக்கு மாவு பதத்தில் கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும்.
இப்போது இந்த மாவை மிக்சர் பிழியும் மெஷினில் போட்டு வைக்கவும். அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் மெஷின் வைத்து பிழிந்து பொரித்து எடுக்கவும். கடைசியாக வேர்க்கடலை, பொட்டுக்கடலை, பொரித்த அவல் சேர்த்து செய்து வைத்த மிக்சரில் கலக்கவும். அவ்வளவு தான் சுவையான ராகி மிக்சர் ரெடி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“