கோடை விடுமுறை விட்டாச்சு இனி பிள்ளைகள் எதாவது ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க சொல்லி கேட்க ஆரம்பித்து விடுவார்கள். தினமும் ஒரு ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க வேண்டிய நேரம் வந்து விட்டது. அதனால் இனி விதவிதமான ஸ்நாக்ஸ் செய்ய கற்றுக்கொள்ளுங்கள்.
Advertisment
அதுவும் பிள்ளைகளுக்கு ஹெல்தியாகவும் கடைகளில் கிடைப்பது போன்றும் செய்து கொடுக்க கற்றுக்கொள்ளுங்கள். கேக், முறுக்கு, ஜூஸ், பர்பி என பலவகையான் ஸ்நாக்ஸ் வகைகள் உள்ளது. அதை எல்லாம் செய்வதை விட பிள்ளைகளுக்கு பிடித்த மாதிரி செய்வது தான் டாஸ்க்.
அவ்வளவு தான் சம்மர் ஸ்பெஷலாக ராகி இனிப்பு பனியாரம் ஹோம் குக்கிங் தமிழ் யூடியூப் பக்கத்தில் செய்து காட்டியிருப்பது போல் செய்து கொடுக்க வேண்டியதுதான்.
தேவையான பொருட்கள்
Advertisment
Advertisements
ராகி மாவு - 1 கப் அரிசி மாவு - 1/4 கப் வெல்லம் - 1 கப் துருவிய தேங்காய் - 1/2 கப் துருவிய தண்ணீர் உப்பு - 1/4 தேக்கரண்டி ஏலக்காய் தூள் - 1 தேக்கரண்டி முந்திரி சமையல் சோடா - 1/4 தேக்கரண்டி நெய்
செய்முறை
ஒரு பவுலில் ராகி மாவு மற்றும் அரிசி மாவு இரண்டையும் சேர்த்து கரைகவும். இதில் துருவிய வெல்லம், துருவிய தேங்காய் மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சரியான பதத்திற்கு கரைத்து கொள்ளவும்.
பின்னர் அதில் சிறிது உப்பு, ஏலக்காய் தூள், நறுக்கிய முந்திரி ஆகியவற்றை சேர்த்து மாவை 10 நிமிடம் ஊற வைக்கவும். பின்னர் சாஃப்டாக வருவதற்கு சமையல் சோடா சேர்க்கலாம்.
அவ்வளவுதான் இப்போது பணியார சட்டியில் நெய் சேர்த்து மாவை ஊற்றவும். ஒரு நிமிடம் கழித்து திருப்பி இரண்டு பக்கமும் பொன்னிறமாகும் வரை வேகவிட்டு எடுக்கலாம்.