காலை உணவை ஹெல்தியாக மாற்ற... உங்கள் டயட்டில் ராகியை சேருங்கள்

காலை உணவை ஹெல்தியாக மாற்ற உணவில் கட்டாயம் ராகியை சேர்த்து கொள்ளுங்கள்.

காலை உணவை ஹெல்தியாக மாற்ற உணவில் கட்டாயம் ராகியை சேர்த்து கொள்ளுங்கள்.

author-image
WebDesk
New Update
ராகி உப்புமா

காலை உணவுக்கு ராகி உப்புமா

காலையில் எப்போதும் இட்லி, தோசை செய்து போர் அடிக்காமல் கொஞ்சம் சத்தாக ஏதாவது ஒரு உணவு செய்ய இனி ஆரம்பித்து விடுங்கள். அதற்காக தான் காலை டிபன் ப்ளானில் ராகியை சேர்க்கலாம். அதற்கு ராகியை வைத்து ஒரு சூப்பரான டிஷ் ஹோம் குக்கிங் யூடியூப் பக்கத்தில் செய்து காட்டியிருப்பதாவது,

Advertisment

தேவையான பொருட்கள்

முளைகட்டிய ராகி மாவு 
எண்ணெய்  
கடலை பருப்பு 
உளுத்தம் பருப்பு  
வேர்க்கடலை  
கடுகு 
சீரகம் 
பெருங்காயத்தூள்
கறிவேப்பிலை
இஞ்சி
வெங்காயம் 
பச்சை மிளகாய்  
மஞ்சள் தூள் 
உப்பு 
துருவிய தேங்காய்

செய்முறை

Advertisment
Advertisements

ராகி உப்மா செய்ய முளை கட்டின ராகி மாவு எடுத்து கொள்ளவும். ஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து கிளறி விடவும்.

மாவை கட்டிகள் இல்லாமல் உதிர்த்து கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் கொஞ்சம் எண்ணெய் தடவி, கிளறிய ராகி மாவை சேர்த்து இட்லி பாத்திரத்தில் வேக வைக்கவும்.

ஒரு அகலமான கடாயில் எண்ணெய் ஊற்றி கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, வேர்க்கடலை, சேர்த்து சிவக்க வறுத்துக்கொள்ளவும். அடுத்து கடுகு, சீரகம், பெருங்காய தூள், கறிவேப்பிலை, நறுக்கிய ஒரு துண்டு இஞ்சி, சேர்த்து வதக்கவும். 

ராகி ரெசிப்பீஸ் | Ragi Recipes In Tamil | Healthy Recipes | Ragi Kozhukattai | Ragi Upma

அடுத்ததாக நறுக்கிய வெங்காயம், கீறிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கலக்கவும்.  தேங்காய் துருவல் சேர்த்து கலந்து விடவும். வேக வைத்த ராகி மாவை சேர்த்து கலந்து விடவும்.

பின்னர் நெய் சேர்த்து கலந்து விடவும். சுவையான ராகி உப்புமா சூடாக பரிமாற தயாராக உள்ளது.

Cooking Tips Health benefits of eating ragi

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: