எல்லா இடங்களிலும் குளிர் மற்றும் மழைக்காலம் ஆரம்பித்துவிட்டது.இதனால் வீட்டில் பொதுவாக இரவு நேரங்களில் குழந்தைகளுக்கு சளி இருமல் போன்ற பிரச்சனைகள் அதிகமாக இருக்கும்.
ஆரம்ப காலத்தில் காலநிலை மாறும் போது இது மாதிரி ஏற்படுவது சாதாரண ஒன்றுதான். எனவே இதற்கு மருந்து மாத்திரைகள் உடனே சாப்பிட வேண்டும் என்பது அவசியம் இல்லை.
மழைக்காலங்களில் சளி வந்தால் பாலில் மஞ்சள் தூள். மிளகு சேர்த்து சாப்பிடலாம். இது சளியை இலக்கி வெளியேற்ற உதவும். எனவே இதனை தினமும் காலை மற்றும் இரவில் எடுத்துக் கொள்ளலாம். தொடர்ந்து நெஞ்சில் சளி கட்டி இருமிக் கொண்டிருப்பவர்களுக்கும் சளி உறைந்திருப்பவர்களுக்கும் மிளகு, மஞ்சள் பால் அருமருந்தாகும்.
கதகதப்பான ஒரு டம்ளர் பாலில் ஒரு சிட்டிகை அளவுக்கு மஞ்சள் தூள், மிளகுத்தூளை சேர்த்து நன்கு ஆற்றி குடிக்க வேண்டும்.
சளி இருமல் இருப்பவர்கள் குறைந்தது ஒரு வாரத்திற்கு இரவில் மிளகு மஞ்சள் பாலை அருந்தி வந்தால் நான்கைந்து நாளிலேயே சளி, இருமல் சரியாகிவிடும். பாலில் மிளகையும் மஞ்சள் தூளையும் சேர்த்துக் கொள்வதற்குக் காரணம் அவற்றின் மருத்துவ குணங்களால் தான்.
மஞ்சள் தூள் நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. இது உடலில் உட்புகும் நோய்க்கிருமிகளை அழித்தொழிக்கும் ஆற்றல் பெற்றது.
அதேபோல மிளகும் அதன் மருத்துவ சக்தியால் வாய்வுத் தொந்தரவுகளை அறவே நீக்குகிறது. சளியை விரட்டும் சக்தி மிளகுக்கு அதிகமாக உள்ளது. மிளகின் காரமும் மஞ்சளின் நோய் எதிர்ப்பு சக்தியும் சேர்ந்து உடலில் இருமல் சளியை உடனடியாக குணமாக்கும்.
குறிப்பாக சளி நீண்ட நாள் இருந்தால் மருத்துவரை கட்டாயம் அணுக வேண்டும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“