சளி, இருமல், ஜலதோஷத்தை விரட்டும் சுக்கு மல்லி காபி எப்படி செய்வது என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
சுக்கு பொடி - கால் கப்
கொத்தமல்லி - அரை கப்
மிளகு - கால் கப்பில் பாதியளவு
ஏலக்காய் - 15
முதலில் சுக்கை ஒரு உரலிலோ அல்லது மிக்ஸியிலோ நன்கு அரைத்து எடுத்து கொள்ள வேண்டும். பிறகு அதனுடன் கொத்தமல்லி விதைகள், மிளகு, ஏலக்காய் ஆகியவற்றை சேர்த்து அரைக்கவும். கொரகொரப்பாக இருக்க வேண்டும்.
இதில் ஈரம் படாமல் பார்த்துக் கொள்ளுங்கள் பின் இதை ஒரு கண்ணாடி டப்பாவில் போட்டு, குறைந்தது ஆறு மாதம் வரை பயன்படுத்தலாம் கெட்டுப் போகாது.
சுக்கு காபி செய்ய முதலில், அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் தண்ணீர் ஊற்றி ஒரு கொதி வந்ததும் அதில் சுக்கு பொடி சேர்த்து நன்றாக கொதிக்க விடுங்கள். தண்ணீர் சிறிதளவு வற்றியதும் அதில் இனிப்பு சேர்த்து ஒரு கொதி வந்ததும், பிறகு அதை இறக்கி வடிகட்டி குடிக்கவும். அவ்வளவுதான் சுவையான சுக்கு காபி தயாராகிவிடும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“