மழை நேரத்தில் சூடாகவும் சுவையாகவும் சாப்பிட மொறு மொறு வெங்காய சமோசா செய்வது எப்படி என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
கோதுமை மாவு
உப்பு
எண்ணெய்
வெங்காயம்m
மஞ்சள் தூள்
மிளகாய் தூள்
கரம் மசாலா
கொத்தமல்லி தூள்
பெருங்காயத்தூள்
சீரகம்
வறுக்காத ரவை
இஞ்சி - பூண்டு பேஸ்ட்
பச்சை மிளகாய்
கருவேப்பிலை
கொத்தமல்லி தழைகள்
மைதா
ஒரு பவுலில் கோதுமை மாவு, சிறிதளவு உப்பு மற்றும் ஒரு டீஸ்பூன் சமையல் எண்ணெயை சூடு செய்து ஊற்றி நன்கு கலந்து விட வேண்டும். அனைத்து மாவிலும் எண்ணெய் படுமாறு கலந்து விட வேண்டும். கட்டியாக இருக்கும் மாவையும் நன்கு பிசைந்து மாவை தூள் பதத்தில் எடுத்து கொள்ள வேண்டும்.
இதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து ஒரு பத்து நிமிடம் ஒரு துணி அல்லது தட்டு வைத்து மூடி வைக்கவும். 10 நிமிடம் கழித்து மாவை லேசாக அழுத்தி பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி சப்பாத்தி போல் மெல்லிசாக தேய்த்து எடுக்கவும்.
மிதமான சூட்டில் தோசை கல்லில் எண்ணெய் ஊற்றாமல் ஈரப்பதம் போகும் அளவிற்கு ஒரு 20 நிமிடம் சுட்டு எடுத்தால் சமோசா பேப்பர் ரெடி ஆகி விடும். சப்பாத்தி வடிவிலேயே வட்டமாக இருப்பதால் இதன் ஓரங்களில் கட் செய்து எடுத்துக் கொள்ளவும். வெட்டப்பட்ட சமோசா பேப்பரை சிறு சிறு துண்டுகளாக்கை வைக்கவும், இது ஸ்டப்பிங்கில் சேர்க்க உதவும்.
இப்போது சமோசா ஸ்டப்பிங் செய்ய ஒரு பெரிய வெங்காயத்தை நீட்டமாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் எடுத்து கொள்ளவும். அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா, கொத்தமல்லி தூள், தேவையான அளவு பெருங்காயத்தூள், சீரகம், வறுக்காத ரவை, இஞ்சி - பூண்டு பேஸ்ட், நறுக்கிய பச்சை மிளகாய், மற்றும் கருவேப்பிலை, கொத்தமல்லி தழைகள் மற்றும் மாவு துண்டுகளையும் சேர்த்து நன்கு பிசைந்து விடவும்.
மசாலா அனைத்தும் ஒன்றோடு ஒன்று நன்றாக கலக்கும் வரை மிக்ஸ் செய்யவும். பின்னர் சமோசாவை ஒட்டுவதற்கு மைதா பேஸ்ட் ரெடி செய்ய வேண்டும். அதற்கு ஒரு குட்டி பவுலில் மைதா மாவு சிறிது சேர்த்து அதில் தண்ணீர் ஊற்றி காரைத்தால் போது மைதா பேஸ்ட் ரெடியாகி விடும்.
இப்போது சமோசா பேப்பரை சமோசா வடிவில் முக்கோணமாக மடித்து உள்ளே ஸ்டப்பிங் வைத்து மைதா பேஸ்டால் ஒட்டி விடவும். பின்னர் இதனை மிதமான சூட்டில் உள்ள எண்ணெய்யில் வேகவைத்து எடுக்க வேண்டும்.
குறிப்பாக எண்ணெய் அதிக சூடாக இருந்தால் சமோசா உடனே சிவந்துவிடும் உள்ளே உள்ள ஸ்டப்பிங் வேகாது. எனவே மிதமான சூட்டில்தான் எண்ணெய் இருக்க வேண்டும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“