scorecardresearch

கருப்பு, பொன்னிறம், பச்சை திராச்சை : எது சிறந்தது?

கருப்பு திராச்சை: இதில் நார்சத்து, இரும்பு சத்து, பொட்டஷியம் உள்ளது மேலும் இதில் ஆண்டி ஆக்ஸிடண்ட் உள்ளது. இதனால் நாம் செல்களை பாதிப்பிலிருந்து மீட்க உதவுகிறது.

திராச்சை
திராச்சை

திராச்சையில் கருப்பு, பொன்னிறம் என்று பல்வேறு நிறங்களில் இருக்கிறது. இந்நிலையில் பல்வேறு திராட்சைகளில் இருக்கும் நன்மைகளை நாம் தெரிந்துகொள்ளப்போகிறோம்.

கருப்பு திராச்சை: இதில் நார்சத்து, இரும்பு சத்து, பொட்டஷியம் உள்ளது மேலும் இதில் ஆண்டி ஆக்ஸிடண்ட் உள்ளது. இதனால் நாம் செல்களை பாதிப்பிலிருந்து மீட்க உதவுகிறது.

நமது குடலை இது சுத்திகரிக்கும். இயற்கையாகவே இதில் இருக்கும் தன்மை நமது குடலை சுத்திகரிக்க உதவுகிறது.  இதுபோல இதில் வைட்டமின் சி மற்றும் வைட்டமின் இ இருப்பதால், இது நமது சருமத்திற்கு ஆரோக்கியமான பொலிவை தருகிறது.

பச்சை நிற திராச்சை: இதில் நார்சத்து இருப்பது, அதுபோல  இரும்பு சத்து அதிகம் உள்ளது. இந்நிலையில் இந்த திராச்சை இதயத்திற்கு நல்லது. இந்நிலையில் இது கொலஸ்ட்ரால் அளவை குறைத்து, இதய நோய் வராமல் தடுக்கும்.

இதில் அதிக இரும்பு சத்து இருப்பதால், நமது ரத்த செல்களுக்கு இது உதவியாக இருக்கும். மேலும் இதில் இருக்கும் என்சமை , நமது உணவை உடைத்து அதை ஜீரணிக்க உதவுகிறது.

பொன்னிற திராச்சை :

இந்நிலையில் பச்சை நிற விதைகள் இல்லாத கிரேப்சில் இருந்து செய்வது இந்த பொன்னிற திராச்சை. இந்நிலையில் சல்பர் டையாக்சைட் பச்சை கிரேப்சில் பயன்படுத்தி, இந்த திராச்சை செய்யப்படுகிறது. இதில் நார்சத்து, பொட்டாஷியம், இரும்பு சத்து இருக்கிறது. இயற்கையாகவே இதில் சர்க்கரை அளவு அதிகம் இருப்பதால், பேக்கிங் செய்வதற்கு பயன்படுகிறது.  

இதில் இருக்கும் நார்சத்து, ஜீரணத்தை சீராக்குகிறது. இதனால் மலச்சிக்கலை நிக்குகிறது.  இதில் இருக்கு இனிப்பு தன்மை உடனடி சக்தி கொடுக்கிறது. மேலும் இதில் கால்சியம், மெக்னிசியம் இருக்கிறது. இவை நமது எலும்புகளை ஆரோக்கியமாக வைத்திட உதவும்.  

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Food news download Indian Express Tamil App.

Web Title: Raisins colorful health benefits