பஜ்ஜி, போண்டா சாப்பிட்டு இருப்போம். அதிலும் இன்னும் கொஞ்சம் டிப்ரண்டாக ராஜபாளையம் தவல வடை எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம். ராஜபாளையம் பக்கம் சென்றால் அனைத்து கடைகளிலும் இந்த தவல வடை கிடைக்கும். ஒரு டீ யோடு இதை சாப்பிட்டால் சுவையாக இருக்கும். எப்படி செய்வது என்று செஃப் தீனா தனது யூடியூப் பக்கத்தில் செய்து காட்டியிருக்கிறார்.
Advertisment
தேவையான பொருட்கள்
கடலை மாவு - 3 கப் அரிசி மாவு – 1 கப் பெரிய சைஸ் வெங்காயம் – 2 கொத்தமல்லி தழை – தேவையான அளவு மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன் பச்சை மிளகாய் – 2 உப்பு பெருங்காயம் – 1/2 டீஸ்பூன் தேங்காய் துருவல் – 2 துண்டு கறிவேப்பிலை எண்ணெய்
செய்முறை
Advertisment
Advertisements
ஒரு பவுலில் மேற்குறிப்பிட்ட அனைத்து பொருட்களையும் ஒவ்வொன்றாக சேர்த்து கைகளால் முதலில் பிசைந்து கொள்ளவும். பின்னர் சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து நல்ல பதத்தில் பிசைந்து கொள்ளவும்.
ரொம்ப கெட்டியாகவும் இருக்கக்கூடாது, தண்ணீர் மாதிரியும் இருக்கக் கூடாது. நடுத்தரமான ஒரு பதத்தில் இருக்க வேண்டும். இந்த வடைமாவை நாம் கரண்டியில் எடுத்து தான் ஊற்றுவோம். அதனால் அந்த பதத்தில் இருக்க வேண்டும்.
பின்னர் நன்கு சூடான எண்ணெயில் ஒரு கரண்டி இந்த மாவை எடுத்து அப்படியே மெதுவாக எண்ணெய்க்குள் மூழ்கியவாறு ஊற்றி இரண்டு பக்கமும் திருப்பி போட்டு பொறித்து எடுக்க வேண்டும்.
நன்கு பொன்னிறமாக சிவந்து வந்ததும் எடுத்து சாப்பிடலாம். ஒரு டீயோடு சேர்த்து இதை சாப்பிடும் போது ஒரு ஈவினிங் ஸ்நாக்ஸ்க்கு பொருத்தமாக இருக்கும்.