வாயுத் தொல்லைக்கு சுமூக தீர்வு... சப்பாத்தி கூட பூண்டு இப்படி சேருங்க; செம்ம டிஷ்!

வாயுத்தொல்லை உள்ளது என்றாலே அவர்கள் பூண்டு உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். அப்படி இருக்கையில் பூண்டை பச்சையாக சாப்பிட முடியாது ஆனால் இந்த மாதிரி சட்னி செய்து சாப்பிடலாம்.

வாயுத்தொல்லை உள்ளது என்றாலே அவர்கள் பூண்டு உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். அப்படி இருக்கையில் பூண்டை பச்சையாக சாப்பிட முடியாது ஆனால் இந்த மாதிரி சட்னி செய்து சாப்பிடலாம்.

author-image
WebDesk
New Update
chappathi garlic

சப்பாத்திக்கு ஒரு வழக்கமான சைடு டிஷ். அதுவும் வாய்த்தொல்லையை போக்கும் பூண்டு வைத்து சுவையான ஒரு சட்னி எப்படி செய்வது என்று பார்ப்போம். வெறும் பூண்டைக் கொண்டு மிக எளிதாகவும், சுவையாகவும் ஒரு சப்ஜி செய்வது எப்படி என்பதை பற்றி வன்னிதாஸ் ஃபுட்வேர்ல்டு இன்ஸ்டா பக்கத்தில் செய்து காட்டியிருப்பது பற்றி பார்ப்போம். இது ஒரு தனித்துவமான சுவையையும், ஆரோக்கிய நன்மைகளையும் வழங்குகிறது.

தேவையான பொருட்கள்:

Advertisment

உரிக்கப்பட்ட பூண்டு - ¾ கப் (100 கிராம்)
மிளகாய் தூள் - ¾ டீஸ்பூன்
கொத்தமல்லி தூள் - ½ டீஸ்பூன்
மஞ்சள் தூள் - ¼ டீஸ்பூன்
உப்பு  
தண்ணீர் - சிறிது  
எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்
கடுகு  
சீரகம் 
கொத்தமல்லி இலை - சிறிதளவு  
கசூரி மேத்தி  

செய்முறை:

முதலில், உரிக்கப்பட்ட ¾ கப் (100 கிராம்) பூண்டை ஒரு உரலில் சேர்த்து, தண்ணீர் சேர்க்காமல் நன்றாக நசுக்கிப் பொடித்துக் கொள்ளவும். (மிக்ஸியில் அரைத்தால் விழுது போல ஆகிவிடும், எனவே உரலைப் பயன்படுத்துவது சிறந்தது). நசுக்கிய பூண்டைப் ஒரு கிண்ணத்திற்கு மாற்றவும்.

அதே கிண்ணத்தில் ¾ டீஸ்பூன் மிளகாய் தூள், ½ டீஸ்பூன் கொத்தமல்லி தூள், ¼ டீஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்க்கவும். சிறிது தண்ணீர் சேர்த்து, அனைத்து மசாலாக்களும் பூண்டுடன் நன்றாகக் கலக்குமாறு கிளறவும். இது ஒரு கெட்டியான பசை போல் இருக்கும்.

Advertisment
Advertisements

ஒரு கடாயில் 3 டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு சூடாக்கவும். எண்ணெய் காய்ந்ததும், கடுகு மற்றும் சீரகம் சேர்த்து பொரிய விடவும். கடுகு வெடித்ததும், தயார் செய்து வைத்துள்ள பூண்டு மசாலா கலவையை எண்ணெயில் சேர்க்கவும். அனைத்தையும் நன்றாக கலந்து விடவும். அடுப்பை குறைந்த தீயில் வைத்து, 5 நிமிடங்கள் வரை சமைக்கவும். 

இந்தக் கலவை கடாயில் ஒட்டாமல் இருக்க அவ்வப்போது கிளறிவிடவும். கலவை நன்கு வதங்கி, எண்ணெய் பிரிந்து வரும்போது, மீண்டும் ஒரு முறை நன்றாக கிளறிவிடவும். இறுதியாக, சிறிது நறுக்கிய கொத்தமல்லி இலைகள் மற்றும் சிறிது கசூரி மேத்தி சேர்த்து நன்றாக கலந்து அடுப்பை அணைக்கவும். இந்த சுவையான பூண்டு சப்ஜியை சூடான சப்பாத்தியுடன் பரிமாறும்போது அதன் சுவை அற்புதமாக இருக்கும்.  

Benefits of adding garlic to your food Garlic

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: