இந்த ரக்சா பந்தனுக்கு, இப்படி மைசூர் பக் செய்தால் அட்டகாசமா இருக்கும். உங்க சொந்தங்களுக்கு கொடுத்து மகிழுங்க.
தேவையான பொருட்கள்
1 கப் ரவை
60 எம்.எல் நெய்
2 டேபிள் ஸ்பூன் பால்
1 கப் சர்க்கரை
அரை கப் தண்ணீர்
அரை ஸ்பூன் அளவிற்கு ஏலக்காய் தூள்
மஞ்சள் நிற புட் கலர்
செய்முறை : ஒரு பாத்திரத்தில் நெய் ஊற்றி கொள்ளவும், அதில் ரவையை சேர்த்து நன்றாக கிளர வேண்டும். சுமார் 4 நிமிடங்கள் வறுக்க வேண்டும். இதை தனியாக எடுத்து வைத்துகொள்ளுங்க. தொடர்ந்து அந்த பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து சர்க்கரையை சேர்த்து கொள்ளவும். சர்க்கரை நன்றாக கரைந்த பிறகு ஏலக்காய் பொடி சேர்க்கவும், தொடர்ந்து மஞ்சள் நிற புட் கலர் சேர்த்து கிளரவும். தற்போது இதில் வறுத்த ரவையை சேர்த்து கிளர வேண்டும். 10 நிமிடங்களுக்கு பிறகு, இதை வெண்ணை தடவிய தட்டில் கொட்ட வேண்டும். ஸ்பூன் பயன்படுத்தி அதை சமம் செய்ய வேண்டும். சிறிது நேரம் கழித்து கோடுகள் போட்டு, பிரித்து எடுக்கவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“