ஒரு முறை செட்டிநாடு ஸ்பெஷல் ஸ்வீட் உக்காரையை வீட்டில்ச் செய்து பாருங்க. செம்ம சுவையா இருக்கும்.
தேவையான பொருட்கள்
பாசி பருப்பு – அரை கப்
1 ½ கப் தண்ணீர்
வெல்லம் 1 ½ கப் வெல்லம்
7 டேபிள் ஸ்பூன் நெய்
10 முந்திரி பருப்பு
கால் கப் ரவை
கால் கப் துருவிய தேங்காய்
செய்முறை : பாசி பருப்பை வறுக்க வேண்டும். இதைத்தொடர்ந்து இதை தண்ணீர் ஊற்றி அவித்து எடுக்கவும். ஒரு பாத்திரத்தில் 2 ஸ்பூன் நெய் ஊற்றி முந்திரியை வறுத்து கொள்ளவும். இதை தனியாக எடுத்து வைக்கவும். தொடர்ந்து இன்னும் கொஞ்சம் நெய் சேர்த்து, அதில் ரவை சேர்த்து கிளரவும். இதைத்தொடர்ந்து தேங்காய் சேர்த்து வறுத்து கொள்ளவும். தொடர்ந்து பாசி பருப்பு சேர்த்து கிளரவும். ஒரு பாத்திரத்தில், வெல்லம், தண்ணீர் சேர்த்து கிளரவும். இந்த பாகை பருப்பில் ஊற்றி கிளரவும். தொடர்ந்து கிளரவும். கடைசியாக வறுத்த முந்திரி சேர்க்கவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“