ரம்ஜானுக்கு உங்கள் வீட்டிலும் பாய் வீட்டு ஸ்டைலில் முகலாய் சிக்கன் பிரியாணி ஈஸியாக செய்யலாம். எல்லோருக்கும் பிடித்த மாதிரி எப்படி செய்யலாம் என்று ஹோம் குக்கிங் யூடியூப் பக்கத்தில் செய்து காட்டியிருப்பது பற்றி பார்ப்போம்.
Advertisment
தேவையான பொருட்கள்
சிக்கன் - 2 கிலோ பாஸ்மதி அரிசி - 1 கிலோ இஞ்சி பூண்டு விழுது - 3 மேசைக்கரண்டி தயிர் - 300 கிராம் உப்பு மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி மிளகாய் தூள் - 4 தேக்கரண்டி மிளகு தூள் - 1 தேக்கரண்டி தனிய தூள் - 3 தேக்கரண்டி சீரக தூள் - 3 தேக்கரண்டி கரம் மசாலா தூள் - 2 தேக்கரண்டி பட்டை கிராம்பு பச்சை ஏலக்காய் கருப்பு ஏலக்காய் ஜாதிபத்திரி அன்னாசி பூ மராத்தி மொக்கு ஷாஹி ஜீரா பிரியாணி இலை எலுமிச்சைபழச்சாறு பச்சை மிளகாய் - 4 நறுக்கியது பொரித்த வெங்காயம் புதினா இலை கொத்தமல்லி இலை பிரெஷ் கிரீம் - 2 மேசைக்கரண்டி குங்குமப்பூ பால் குங்குமப்பூ தண்ணீர் பாதாம் - 1/4 கப் நறுக்கியது முந்திரி - 1/4 கப் நறுக்கியது பிஸ்தா - 1/4 கப் நறுக்கியது வெங்காயம் பொரித்த எண்ணெய் நெய்
செய்முறை:
Advertisment
Advertisements
ஒரு பாத்திரத்தில் சிக்கன், எலுமிச்சைபழச்சாறு, இஞ்சி பூண்டு விழுது, தயிர் மற்றும் உப்பு சேர்த்து கலந்துவிடவும். பின்பு மஞ்சள் தூள், மிளகாய் தூள், மிளகு தூள், தனியா தூள், சீரக தூள், கரம் மசாலா தூள் சேர்த்து கலந்துவிடவும்.
பிறகு பட்டை, கிராம்பு, பச்சை ஏலக்காய், கருப்பு ஏலக்காய், ஜாதிபத்திரி, அன்னாசி பூ, மராத்தி மொக்கு, ஷாஹி ஜீரா, பிரியாணி இலை சேர்த்து கலந்துகொள்ளவும். பின்பு அதில் வெங்காயம் பொரித்த எண்ணெய், நெய், பச்சை மிளகாய், பொரித்த வெங்காயம், புதினா, கொத்தமல்லி இலை சேர்த்து கலந்துவிடவும்.
பின்னர் பிரெஷ் கிரீம், குங்குமப்பூ பால், நறுக்கிய பாதாம், முந்திரி, பிஸ்தா சேர்த்து கலந்து 2 மணிநேரம் ஊறவிடவும். பாஸ்மதி அரிசியில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 1 மணிநேரம் ஊறவிடவும்.
மற்றோரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசி பூ, பிரியாணி இலை, ஷாஹி ஜீரா, கொத்தமல்லி இலை , புதினா இலை சேர்த்து 3 நிமிடம் கொதிக்கவிடவும். பின்பு ஊறவைத்த அரிசியை சேர்த்து, பிறகு உப்பு, எலுமிச்சைபழச்சாறு சேர்த்து கலந்துவிடவும்.
அரிசி 60 சதவீதம் வெந்ததும் சிறிதளவு எடுத்து தனியாக வைக்கவும். மீதம் உள்ள அரிசியை 80 சதவீதம் வேகவிட்டு பின்பு வடித்து தனியாக எடுத்து வைக்கவும். தவாவில் அகலமான பாத்திரத்தை வைத்து அதில் நெய் மற்றும் வெங்காயம் பொரித்த எண்ணெய் ஊற்றவும்.
பின்பு அடுப்பை அதிக தீயில் வைத்து ஊறவைத்த சிக்கனை சேர்த்து 3 நிமிடம் வேகவிடவும். 60 சதவீதம் வேகவைத்த அரிசியை சேர்த்து அதன் மேல் பொரித்த வெங்காயம், கொத்தமல்லி இலை, புதினா இலை, நெய், குங்குமப்பூ தண்ணீர் சேர்க்கவும். பின்பு 80 சதவீதம் வேகவைத்த அரிசியை சேர்த்து அதன் மேல் பொரித்த வெங்காயம், கொத்தமல்லி இலை, புதினா இலை, நெய், குங்குமப்பூ தண்ணீர் சேர்க்கவும்.
பிறகு பாயில் பேப்பரை வைத்து மூடி அதன் மேல் தட்டை வைத்து மூடி 45 நிமிடம் தம்மில் வேகவிட்டு எடுத்தால் அட்டகாசமான முகலாய் சிக்கன் பிரியாணி ரெடி.