பள்ளி வாசல் ஸ்டைல் நோன்பு கஞ்சி... குக்கரில் இப்படி ரெடி பண்ணுங்க!
நீங்களும் உங்கள் வீட்டிலேயே பள்ளி வாசல் ஸ்டைலில் நோன்பு கஞ்சி செய்யலாம். அதற்கு குக்கரில் இப்படி செய்து பாருங்கள். நோன்பு கஞ்சி அமிர்தமாக இருக்கும். ட்ரை பண்ணி பாருங்கள்.
நோன்பு முடிக்கும்போது பள்ளி வாசலில் கொடுக்கப்படும் அந்த நோன்பு கஞ்சி உண்மையில் ரொம்ப நன்றாக இருக்கும்.
இது ரமலான் நோன்பு காலம், எம்மதமு சம்மதம் என்று மத நல்லிணக்கத்துக்கு சொந்தமானவர்கள் யாரும் நோன்பு இருக்கலாம். நோன்பு முடிக்கும்போது நோன்புக் கஞ்சி சாப்பிடுவார்கள். நாள் முழுவதும் சாப்பிடாமல் நோன்பு இருந்து நோன்பு முடிக்கும்போது பள்ளி வாசலில் கொடுக்கப்படும் அந்த நோன்பு கஞ்சி உண்மையில் ரொம்ப நன்றாக இருக்கும்.
Advertisment
நீங்களும் உங்கள் வீட்டிலேயே பள்ளி வாசல் ஸ்டைலில் நோன்பு கஞ்சி செய்யலாம். அதற்கு குக்கரில் இப்படி செய்து பாருங்கள். நோன்பு கஞ்சி அமிர்தமாக இருக்கும். ட்ரை பண்ணி பாருங்கள்.
ஸ்டவ்வைப் பற்ற வைத்து அதில் குக்கரை திறந்து வையுங்கள். ஒரு டேபிள்ஸ்பூன் நெய் போடுங்கள். அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய் போடுங்கள். ஒரு பெரிய வெங்காயம் நீல வாக்கில் கட் பண்ணி போடுங்கள். சின்ன வெங்காயம் 10 பொடியாக கட் பண்ணி போடுங்கள். பச்சை மிளகாய் 4 நீளவாக்கில் கீறி போட்டு வதக்குங்கள். இதனுடன் நன்றாக பொடியாக நறுக்கிய மட்டன் 50 கிராம் போட்டு வதக்குங்கள். இதனுடன் ஒரு டேபிள்ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்துக்கொள்ளுங்கள். பச்சை வாசனை போகிற வரை நன்றாக வதக்குங்கள்.
Advertisment
Advertisements
அடுத்து, இதனுடன் ஒரு பெரிய தக்காளியைக் கட் பண்ணி சேர்த்துக்கொள்ளுங்கள். கூடவே கொஞ்சம் புதினா, கொத்தமல்லி சேர்த்துக்கொள்ளுங்கள். இப்போது, அரை டீஸ்பூன் கரம் மசாலா போடுங்கள். தேவையான அளவு உப்பு போடுங்கள். இப்போது, ஒரு கப் பச்சரிசிக்கு 6 கப் அளவு தண்ணீர் சேர்க்க வேண்டும். விசில் போடாமல் கொஞ்சம் நேரம் குக்கரை மூடி வையுங்கள். கொஞ்ச நேரம் கொதிக்கட்டும்.
உங்களுக்கு நான் வெஜ் வேண்டாம் என்றால் மட்டன் தவிர்த்துவிட்டு மற்றதையெல்லாம் போட்டு செய்யலாம்.
முன்னதாகவே 1 கப் பச்சரிசியை 1 மணி நேரம் ஊற வைத்துக்கொள்ளுங்கள். அதே போல, அரை கப் பாசிப் பருப்பு ஊற வைத்துக்கொள்ளுங்கள்.
இப்போது, குக்கரைத் திறந்து 1 கப் அரிசியை போடுங்கள், இதனுடன், அரை கப் பாசிப் பருப்பையும் போடுங்கள். நன்றாகக் கலந்துவிடுங்கள். இப்போது மீண்டும் குக்கரை மூடி போட்டு, விசில் போட்டு வேக வையுங்கள். 7 முதல் 8 விசில் வரட்டும். ஸ்டவ்வை ஆஃப் செய்து விடுங்கள். பிறகு, குக்கரை திறந்து இதனுடன் 1 கப் தேங்காய் பால் சேர்த்து கொத்தமல்லி இலையை லேசாகத் தூவி பரிமாறினால் பள்ளிவாசல் ஸ்டைல் நோன்பு கஞ்சி செம சுவையாக அமிர்தமாக இருக்கும். உங்கள் வீட்டில் பள்ளிவாசல் ஸ்டைல் நோன்பு கஞ்சி செய்து பாருங்கள்.