தற்போது சமையல் கலைஞராக வலம் வரும் மாதம்பட்டியின் சமையலுக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உண்டு. அவர் சமையல் செய்யும் நிகழ்ச்சிகளில் உணவு உண்பவர்களே அவரை பாராட்டி பேசுவர். நிறைய உணவு வகைகளையும் புதுவிதமான டிஷ்களை அவ்வப்போது
அந்த வகையில், அவரது கைப்பக்குவத்தில் அனைவருக்கு பிடித்த ரோட்டு கடை காளான் எப்படி எளிதில் உங்களது வீடுகளில் தயார் செய்யலாம் என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
காளான் - 250 கிராம்
கருவேப்பிலை
பெரிய வெங்காயம்
கான் ஃபிளவர் மாவு
சோயா சாஸ்
தக்காளி சாஸ்
ரெட் சில்லி சாஸ்
எண்ணெய்
உப்பு
மிளகு தூள்
கரம் மசாலா
இஞ்சி - பூண்டு பேஸ்ட்
மிளகாய் தூள்
செய்முறை
காளான் தயார் செய்ய முதலில் அவற்றை சுத்தம் செய்து நறுக்கி கொள்ளவும். ஒரு பாத்திரம் காளான், கருவேப்பிலை, கான் ஃபிளவர் மாவு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும். பின்னர் உப்பு, மிளகாய் தூள் சேர்த்து கலந்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து பிசைந்து விடவும்.
இவற்றை நன்கு கொதிக்க வைத்துள்ள எண்ணெயில் போட்டு சிவந்து வரும் வரை காளானை வறுத்துக் கொள்ளவும்.
தொடர்ந்து, ஒரு கடாயை எடுத்து அதில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து சூடேற்றவும். பிறகு, 2 ஸ்பூன் இஞ்சி - பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கி நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். கருவேப்பிலை சேர்த்து பொன்னிறமாக வரும் வரை வதக்கி மிளகாய் தூள், மிளகு தூள் சேர்த்து தண்ணீர் ஊற்றி நன்கு கலந்து கொதிக்க விடவும்.
பிறகு 2 அனைத்து சாஸ் வகைகளையும் சேர்த்து அத்துடன் உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விட்டு ஏற்கனவே வறுத்து வைத்துள்ள காளானை சேர்த்து இவற்றை கம்மியான தீயில் வைத்து வேக வைக்கவும். அவை நன்கு சுண்டி வந்ததும் அவற்றை கிண்ணத்தில் எடுத்து அதன் மேல் வெங்காயம், கொத்தமல்லி தழை, கருவேப்பிலை தூவி சாப்பிட்டால் போதும் அவ்வளவு ருசியாக இருக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“