என்னதான் வீட்டில் ரசம் செய்தாலும் சுவை இல்லை என்று கவலை படுகிறீர்களா? அதற்கு இந்த ஒரு சில டிப்ஸ்களை ஃபாலோ செய்வது அவசியம்.
ரசப்பொடி கூட தேவையில்லை சூடான சுவையான ரசம் எப்படி செய்வது என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
கொத்தமல்லி
மிளகு
சீரகம்
வெந்தயம்
காய்ந்த மிளகாய்
பூண்டு
புளி கரைசல்
கருவேப்பிலை
கொத்தமல்லி தழைகள்
உப்பு
மஞ்சள் தூள்
எண்ணெய்
கடுகு
பச்சை மிளகாய்
பெருங்காயத்தூள்
செய்முறை
ஒரு மிக்ஸி ஜாரில் கொத்தமல்லி, மிளகு, சீரகம், சிறிது வெந்தயம், காய்ந்த மிளகாய் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். பின்னர் அதில் பூண்டு சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
புளி கரைசலில் நறுக்கிய தக்காளி, கருவேப்பிலை, கொத்தமல்லி தழை, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அனைத்தையும் நன்கு கலந்து விடவும். உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து விடவும்.
ரசம் இப்படி வைத்தால் ஒரு தட்டு சோறும் காலியாகிவிடும் | மணக்க மணக்க ரசம் | rasam recipe in tamil
ஒரு கடாயில் எண்ணெய், கடுகு, வர மிளகாய் சேர்த்து அரைத்து வைத்துள்ள மிளகு, சீரகம், நான்கு பச்சை மிளகாய், கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
அதில் கரைத்து வைத்துள்ள புளிக்கரைசலை சேர்த்து சிறிது பெருங்காயத்தூள் சேர்த்து நுரை பொங்கும் போது மேலே சில கொத்தமல்லி தழைகளை தூவி இறக்கினால் சுவையான ரசம் ரெடி ஆகிவிடும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“