ரேஷன் புழுங்கல் அரிசியில் சுவையான இடியாப்பம் செய்யலாம். எப்போதும் கடைகளில் வாங்கும் அரிசியை வைத்து இடியாப்பம் செய்வோம். ஆனால் இனி ரேஷன் அரிசி வைத்து இடியாப்பம் செய்யலாம். மிகவும் சாஃப்டாக நூல் மாதிரி இருக்கும். ரேஷன் அரிசியில் பூ மாதிரி உதிரியான இடியாப்பம் செய்வது பற்றி இந்தியன் ரெசிபிஸ் தமிழ் யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பது பற்றி பார்ப்போம்.
Advertisment
தேவையான பொருட்கள்
ரேஷன் புழுங்கல் அரிசி உப்பு நெய் அல்லது எண்ணெய்
செய்முறை
Advertisment
Advertisements
ரேஷன் புழுங்கல் அரிசி ஒரு கப் எடுத்து தண்ணீர் விட்டு ஒரு இரண்டு மூன்று முறை நன்றாக கழுவிக்கொள்ள வேண்டும். பின்னர் இதனை ஒரு நான்கு முதல் ஐந்து மணி நேரம் ஊற வைத்து எடுத்துக்கொள்ளவும். வெயிலில் தண்ணீர் இல்லாமல் காய வைத்து அரைத்துக் கொள்ளவும்.
மாவு அரைத்து எடுத்து அதனை ஒரு சட்டியில் வறுத்து பின்னர் அதனை மீண்டும் அரைத்து எடுத்தால் மாவு நைசாக கிடைக்கும். பின்னர் இதனை ஆறவைத்து விடவும்.
இப்போது ஒரு கடாயில் இதனை சேர்த்து தண்ணீர் விட்டு கரைத்து அதனுடன் உப்பு சேர்த்து மிதமான சூட்டில் கிளறி விடவும். இந்த மாவு கெட்டியான பதத்திற்கு வந்துவிடும். பின்னர் இதனை ஆற விட்டு எடுத்து பிசைந்து கொள்ளவும்.
இட்லி தட்டில் நெய் அல்லது எண்ணெய் தடவி இந்த மாவை இடியாப்பத்திற்கு ஏற்ப பிழிந்து வேகவிட்டு எடுக்கலாம். இதற்கு எப்போதும் போல தேங்காய் பால் சுவையாக இருக்கும்.