ரேஷன் பச்சரிசியை வைத்து ஈசியாக இடியாப்பம் பூ மாதிரி உதிரியாக எப்படி செய்வது என்று மங்கை கிச்சன் யூடியூப் பக்கத்தில் செய்து காட்டியிருப்பது பற்றி பார்ப்போம். இதற்கு நீங்கள் எப்போதும் பயன்படுத்தும் அளவையே உங்கள் குடும்பத்திற்கு ஏற்றார் போல பயன்படுத்திக் கொள்ளலாம்.
Advertisment
தேவையான பொருட்கள்:
பச்சரிசி இட்லி அரிசி உப்பு எண்ணெய்
செய்முறை
Advertisment
Advertisements
ஒரு பாத்திரத்தில் ரேஷன் பச்சரிசியும் இட்லி அரிசியும் சேர்த்து கழுவி கொள்ளவும். பின்னர் நன்கு கொதிக்க வைத்த சுடுதண்ணீரை இதில் ஊற்றி நான்கு முதல் ஐந்து மணி நேரம் ஊற வைக்கவும். பின்னர் தண்ணீரை வடித்து அரிசியை நன்கு வெயிலில் காய வைத்து மொறு மொறு என்று வெந்ததும் பவுடர் மாதிரி நைசாக அரைத்துக் கொள்ளவும்.
ஒரு தட்டில் இந்த மாவை சலித்து சேர்த்து அதில் தேவையான உப்பு, எண்ணெய் சேர்த்து கலந்து கொள்ளவும். பின்னர் இதில் கொதிக்க வைத்த தண்ணீரை சிறிது சிறிதாக சேர்த்து மாவை நன்கு கலந்து கொள்ளவும்.
மாவு சாஃப்டாக வந்ததும் இதை இடியாப்ப ஒலக்கில் சேர்த்து பிழிந்து சுற்றி எடுத்தால் போதும் சுவையான இடியாப்பம் ரெடியாகிவிடும். இதற்கு தேங்காய் பால் வைத்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.