இட்லிக்கு மாவு அரைப்பது என்பதே பெரிய வேலைதான். ஏனென்றால் எப்படி இட்லி மாவு அரைத்தாலும் நன்றாக வரவில்லை. இட்லி, கல்லு மாதிரி இருக்கிறது என்று குறை சொல்வார்கள். ஆனால் விங்ஸ் ஆஃப் வுமன் யூடியூப் பக்கத்தில் ரேஷன் அரிசியை பயன்படுத்தி இட்லிக்கு மாவு அரைப்பது பற்றி கூறியிருப்பதாவது,
இட்லி சாஃப்டாக இருக்க ஒரு சீக்ரட் டிப்ஸ் மற்றும் அளவு குறித்தும் கூறியிருப்பதாவது,
தேவையான பொருட்கள்
உளுந்து
ரேஷன் அரிசி
சாப்பாட்டு அரிசி
உப்பு
தேங்காய் எண்ணெய்
செய்முறை
ஒரு கப் உளுந்து எடுத்து கழுவி ஃப்ரிட்ஜில் வைத்து நான்கு மணி நேரம் ஊற வைக்கவும்.
அதே கப்பில் நான்கு கப் ரேஷன் அரிசி மற்றும் இரண்டு கப் சாப்பாட்டு அரிசி எடுத்து கழுவி ஊறவைத்து வைக்கவும். ஊற வைக்கும் போது அதில் கல் உப்பு சேர்த்து ஊற வைக்க வேண்டும். அப்போது தான் அரிசி பழபழப்பாக வெள்ளை நிறத்தில் இருக்கும்.
முதலில் உளுந்தை நன்கு அரைத்து கொள்ளவும். உளுந்தை ஊற வைத்த தண்ணீரை வைத்து நன்கு நைசாக அரைத்துக் கொள்ளவும். பின்னர் அதில் அரிசியை போட்டு இந்த குளிர்ந்த நீரை ஊற்றி கொரகொரப்பாக அரைக்க வேண்டும்.
ரேஷன் அரிசி இட்லி பஞ்சுபோல வர இத ஒரு ஸ்பூன் சேருங்க/ration rice idli batter
உளுந்து மைய அரைபட வேண்டும். அதேபோல அரிசி கொரகொரப்பாக தான் அரைக்க வேண்டும். பின்னர் நன்கு கை வைத்து மாவை கரைத்து புளிக்க வைக்க வேண்டும். 8 மணி நேரம் நன்கு மாவு புளித்து வந்ததும் மாவை தனியாக எடுத்து கரைத்துக் கொள்ளவும்.
இந்த மாவில் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து எப்போதும் போல இட்லி ஊத்தி எடுத்தால் புசுபுசுன்னு இட்லி சாஃப்டாக இருக்கும்.