ரேஷன் புழுங்கல் அரிசி வைத்து சாஃப்டான இட்லி செய்ய எந்த அளவில் உளுந்து சேர்க்க வேண்டும் என்று பார்ப்போம்.
ஒரு டம்ளரில் எட்டு டம்ளர் புழுங்கல் அரிசி எடுத்துக் கொள்ளவும். அதில் கல் உப்பு சேர்த்து நன்கு கழுவ வேண்டும். அப்படி கல் உப்பு சேர்த்து ஒரு ஐந்து முறை கழுவும் போது அதில் உள்ள பிசுபிசுப்பு தன்மை நீங்கிவிடும். பின்னர் தண்ணீர் சேர்த்து ஒரு ஆறு மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
அரிசி எடுத்த அதே டம்ளரில் முக்கால் டம்ளர் உளுந்து எடுக்க வேண்டும்.அதில் ஒரு டீஸ்பூன் வெந்தயமும் சேர்த்து இரண்டையும் மூன்று முறை கழுவி ஊற வைக்க வேண்டும். உளுந்து மாவு அரைப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் ஊற வைத்தால் போதுமானது. பழைய உளுந்தாக பார்த்து வாங்க வேண்டும் அப்பொழுது தான் இட்லி நல்லா சாஃப்டா வரும்.
தண்ணீர் இல்லாமல் இவை அனைத்தையும் முதலில் ஒரு பாத்திரத்தில் நன்கு மிக்ஸ் பண்ணி எடுத்துக் கொள்ள வேண்டும்.பின்னர் அரிசி, உளுந்து, வெந்தயம் இவை அனைத்தையும் நன்கு மிக்ஸ் பண்ணி எடுத்துக்கொள்ள வேண்டும். மெஷினில் அரைக்க தண்ணீர் ஊற்றியோ தண்ணீர் இல்லாமலேயோ கொடுக்கலாம்.
மாவு அரைத்து வந்தவுடன் அதில் கல் உப்பு, ஒரு ஸ்பூன் விளக்கெண்ணெய் சேர்த்து கை வைத்து நன்கு மிக்ஸ் செய்ய வேண்டும். மெஷினில் அரைத்தால் மாவு கெட்டியாக இருக்கும் எனவே சிறிது தண்ணீர் ஊற்றி கை வைத்து நன்கு கரைத்து கொள்ளலாம்.
மாவை வேறு பாத்திரத்தில் பிரித்து வைத்து வெளியிலேயே மூடி போட்டு வைக்க வேண்டும். பின்னர் மாவு புளிச்சி வந்தவுடன் இட்லி ஊத்துவதற்கு தேவையான பதத்தில் மாவு எடுத்து அதில் தண்ணீர் ஊற்றி கரைத்து இட்லி சுட்டு எடுத்தால் இட்லி சாஃப்டாக வரும்.
இதில் குறிப்பிட்டுள்ள அளவுகள் அனைத்தும் மெஷினில் அரைப்பதற்கான அளவுகள் ஆகும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“