ரேசன் கடைகளில் விற்கப்படும் அரிசி நல்லதா? கெட்டதா? சர்க்கரை நோயாளிகள் இதை சாப்பிடலாம? என்ற குழப்பம் அனைவருக்கும் உள்ளது. எல்லோரும் நினைப்பது போல ரேசன் அரிசி ஒன்றும் சிறப்பு வாய்ந்த அரிசி இல்லை. எப்போதும் போன்ற அரிசி தான் அதுவும். குறிப்பிட்ட வகை சத்து உள்ளது என்றெல்லாம் சொல்ல முடியாது.
அதுவும் எப்போது போன்றும் நேரடி கொள்முதல் தான். இருப்பினும் கடைகள் மற்றும் ரேசன் கடைகளில் வாங்கும் அரிசியில் சில மாற்றங்கள் உள்ளது. எல்லோரும் சொல்வது போல அதில் சிறிய சத்துக்களும் உள்ளன. அவை என்ன அதற்காக காரணம் என்ன என்று டாக்டர். கார்த்திகேயன் கூறுவது பற்றி பார்ப்போம்.
ரேஷன் கடைகளில் விநியோகிக்கப்படும் அரிசி தனிவகையைச் சேர்ந்தது கிடையாது. உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையால் அறுவடைக் காலங்களில் விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல்மணிகளாகக் கொள்முதல் செய்யப்பட்டு இந்த நெல்கள் மில்களில் இருந்து புழுங்கள் அரிசியாகக் கொண்டு வரப்பட்டு விநியோகிக்கப்படுகிறது.
நெல்மணிகளை ஊறவைத்து வேகவைத்தால் அது புழுங்கல் அரிசி ஆகும். அதன் தவுடுகளில் உள்ள சத்துக்கள் அரிசிக்குச் செல்கிறது. அதனைத் தொடர்ந்து இந்த அரிசிகள் உலர வைக்கப்பட்டு விநியோகிக்கப்படுகிறது.
தற்போது நமக்குக் கிடைக்கும் ரேஷன் அரிசிகள் குறைந்தது இரண்டு அல்லது மூன்று வருடங்கள் பழமையானதாக இருக்கும். காரணம், பஞ்சம், வெள்ளம், அறுவடை இல்லாத காலங்களில் மக்களுக்கு உதவ சேமித்து வைக்கப்படுகிறது.
ரேஷன் கடை அரிசி ஆரோக்கியமானதா? சர்க்கரை நோய்க்கு நல்லதா? | #EOT 019 | Dr Arunkumar
ரேஷன் அரிசிகள் இரண்டு அல்லது மூன்று வருடங்கள் பழமையானதாக இருப்பதால் அடர்த்தியானதாக மாறிவிடுகிறது. இதனால், குறைந்த அளவு மட்டுமே சாப்பிட முடியும். அதனால் பசியையும் தக்கவைக்க முடியும். இதனால் உடல் எடை குறைப்பு மற்றும் சர்க்கரை நோயைக் குறைக்க உதவும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.