மாலை நேரத்தில் ஏதாவது ஸ்நாக்ஸ் சாப்பிட்டால் நன்றாக இருக்கும் என்று பலரும் நினைப்பது உண்டு. அந்த வகையில், ரேஷன் அரிசியை கொண்டு சுவையான ரிப்பன் பக்கோடா ரெசிபியை இதில் காணலாம்.
தேவையான பொருட்கள்:
ரேஷன் புழுங்கல் அரிசி,
பூண்டு,
வரமிளகாய்,
ஓமம் அல்லது சீரகம்,
கல் உப்பு,
பெருங்காயத்தூள்,
பொட்டுக் கடலை மாவு மற்றும்
வெண்ணய்
செய்முறை:
இரண்டு கிளாஸ் அளவிற்கு ரேஷன் புழுங்கல் அரிசியை எடுத்து, நன்றாக கழுவிக் கொள்ளவும். அதன் பின்னர், அரிசியை சுமார் நான்கு மணி நேரத்திற்கு ஊறவைக்க வேண்டும். இனி, 25 பூண்டு, 12 வரமிளகாய் இரண்டையும் கிரைண்டரில் சிறிது தண்ணீர் சேர்த்து அரைக்க வேண்டும்.
இத்துடன் கழுவி வைத்த அரிசியையும் சேர்த்துக் கொள்ளலாம். மேலும், முக்கால் ஸ்பூன் ஓமம் அல்லது சீரகம், ஒரு ஸ்பூன் கல் உப்பு, அரை ஸ்பூன் பெருங்காயத்தூள் ஆகிய அனைத்தையும் சேர்த்து சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து கெட்டியாக அரைக்க வேண்டும்.
இதனுடன் ஒரு கிளாஸ் பொட்டுக் கடலை மாவு, இரண்டு ஸ்பூன் வெண்ணய் சேர்த்து பிசைய வேண்டும். மாவு மிகவும் லேசாகாமல் பார்த்துக் கொள்வது அவசியம் ஆகும். இனி, இந்த மாவை ரிப்பன் பக்கோடா அச்சில் பிழிந்து எண்ணெய்யில் பொறித்து எடுக்கலாம். இவ்வாறு செய்தால் சுவையான பூண்டு ரிப்பன் பக்கோடா தயாராக இருக்கும்.