கூழ் காய்ச்சாமல், மாவு அரைக்காமல் அடிக்கும் வெய்யிலை நன்கு பயன்படுத்தி ஈஸியான முறையில் ரேசன் பச்சரிசியில் மொறு மொறு வத்தல் செய்வது எப்படி என்று இங்கே பார்ப்போம்.
கூழ் காய்ச்சாமல், மாவு அரைக்காமல் அடிக்கும் வெய்யிலை நன்கு பயன்படுத்தி ஈஸியான முறையில் ரேசன் பச்சரிசியில் மொறு மொறு வத்தல் செய்வது எப்படி என்று இங்கே பார்ப்போம்.
நம் வீட்டில் இருக்கிற ரேஷன் பச்சரிசியை வைத்து, சுலபமான முறையில் வத்தல் தயார்செய்துவிடலாம். முதலில் ரேஷன் அரிசியை முதலில் நன்றாக கழுவிக் கொள்ள வேண்டும். நன்றாக சுத்தம் செய்த பின்பு வத்தல் செய்தால் தான், வெள்ளை நிறமாகவும், எந்த விதமான வாடை இல்லாமலும், சுவையாக இருக்கும்.
Advertisment
தேவையான பொருட்கள்:
ரேசன் பச்சரிசி – 2 கப், பச்சை மிளகாய் , தேவையான அளவு உப்பு, தண்ணீர் – 1 கப் அளவு, பெருங்காயம், சீரகம் வாசனைக்கு ஏற்ப.
செய்முறை:
Advertisment
Advertisements
முதலில் ரேஷன் பச்சரிசியை நன்றாக சுத்தம் செய்து கழுவி, 10 மணி நேரம் வரை ஊற வைத்து விட வேண்டும். இன்றைக்கு வத்தல் செய்யப் போகிறீர்கள் என்றால், முந்தைய நாள் இரவே அரிசியை ஊற வைத்துக் கொள்வது நல்லது. இரவு ஊரவைக்கப்பட்ட பச்சரியை மறுநாள் காலை குக்கரில் சேர்த்து அதனுடன் தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து 5 முதல் 6 விசில் வரை நன்றாக வேக வைக்க வேண்டும்.
இப்போது ஸ்டவ்வை ஆஃப் செய்துவிட்டு, அரை மணி நேர்த்துக்கு மூடி போட்டு மூடி விடுங்கள். அரை மணி நேரம் கழித்து திறந்து பார்த்தால், மாவு நன்றாக வெதுவெதுப்பாக இருக்கும். அதனுடன் ஒரு டேபிள்ஸ்பூன் சீரகம், பெருங்காயத்தூள், பொடிபொடியாக நறுக்கிய பச்சைமிளகாய் ஆகியவற்றை சேர்த்து நன்கு கிளற வேண்டும்.
நன்றாக ஆறியதும் ஒரு காட்டன் துணியை வெயில் அதிகம் அடிக்கும் இடத்தில் நன்றாக விரித்து கொள்ளுங்கள். பின் மாவை முறுக்கு அச்சியில் வைத்து துணியில் நேராக பிழிந்து விட வேண்டும். இவ்வாறு வேகவைத்த அனைத்து மாவையும் பிழிந்து கொள்ளுங்கள். பின் ஒரு நாள் முழுவதும் வெயிலில் நன்றாக காயவைக்க வேண்டும். வத்தல் நன்கு காய்ந்த பின் துணியில் தண்ணீர் தெளித்து வடகத்தை உரித்துத்தேடுக்க வேண்டும். இதை வழக்கம் போல, எண்ணெயில் பொரித்து எடுத்தால், சுவையான, மொறு மொறு வத்தல் தயார்..!
நன்றாக காய்ந்த வத்தலை ஒரு சுத்தமான டப்பாவில் கொட்டி காற்று புகாத அளவிற்கு நன்றாக மூடி வைத்தால், இந்த வடகத்தை ஒரு வருடம் வரை வைத்து பயன்படுத்தலாம்.