வீட்டுக்கு திடீரென யாராவது விருந்தாளிகள் வந்துவிட்டார்கள் என்றால் அவர்களுக்கு டிஃபன் செய்ய வீட்டில் இட்லி, தோசை மாவு இல்லையா, கவலையே படாதீர்கள், அவர்களுக்கு 10 நிமிஷத்துல மொறுமொறுவென ரவா தோசை செய்து கொடுங்கள். நிச்சயமாக இந்த ரவா தோசை செம சுவையாக இருக்கும்.
ரவா தோசை செய்ய தேவையான பொருட்கள் மற்றும் செய்முறை:
கருவேப்பிலை ஒரு கொத்து நறுக்கியது.
கொத்தமல்லி ஒரு கைப்பிடி அளவு நறுக்கியது.
பச்சை மிளகாய் 2 பொடியாக நறுக்கியது.
இஞ்சி ஒரு சிறிய துண்டு நறுக்கியது.
பெரிய வெங்காயம் 1 நறுக்கியது.
இதை எல்லாவற்றையும் ஒரு பாத்திர போட்டு தேவையான அளவு உப்பு சேர்த்துக்கொள்ளுங்கள். கால் டீஸ்பூன் அளவு மிளகுதூள் சேர்த்துக்கொள்ளுங்கள். அரை டீஸ்பூன் சீரகம் சேர்த்துக்கொள்ளுங்கள், இதன்கூடவே, அரை கப் அளவு வறுக்காத ரவை சேர்த்துக்கொள்ளுங்கள். அரை கப் அளவு அரிசி மாவு சேர்த்துக்கொள்ளுங்கள். அடுத்து கால் கப் அளவு மைதா மாவு அரை கப் அளவு வறுக்காத ரவை சேர்த்துக்கொள்ளுங்கள்.
இவை எல்லாவற்றையும் நன்றாகக் கலந்துவிட்டு 1 கப் அளவு தண்ணீர் ஊற்றி கரண்டி வைத்து நன்றாகக் கலந்துவிடுங்கள், சிறிது சிறிதாக தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்றாகக் கலந்துவிடுங்கள். ரவா தோசை செய்வதற்கு மாவு கெட்டியாக இல்லாமல் தண்ணீராக இருக்க வேண்டும்.
இப்போது, இந்த மாவை மூடி போட்டு மூடி வைத்துவிட்டு 15 நிமிடம் ஊறவிடுங்கள். இப்போது ரவை தண்ணீரை உறிஞ்சியிருக்கும் இதனால், மாவு கெட்டியாகி இருக்கும். அதனால், இன்னும் சிறிது தண்ணீர் சேர்த்து மாவை தண்ணீராக மாற்றிக்கொள்ளுங்கள். இப்போது ஸ்டவ்வை பற்ற வைத்து, அதன் மீது தோசை சுடும் தவாவை வையுங்கள். 1 டீஸ்பூன் எண்ணெய் அல்லது நெய் ஊற்றி ரவா தோசை செய்யுங்கள். ஸ்டவ் தீயை மிதமாக அல்லது குறைவாக வைத்துக்கொள்ளுங்கள். ரவா தோசையைத் திருப்பிப்போடக் கூடாது. அதனால், தோசை ஊற்றும்போது இடையில் இடைவெளி இருந்தால் அப்படியே விடுங்கள். இப்போது மொறுமொறுவென சுவையான தோசை தயார். இப்போது நீங்கள் வழக்கமான சட்னியுடன் சேர்த்து சுவையான ரவா தோசையை சாப்பிடலாம்.
நீங்கள் விரும்பினால், அரிசி மாவுக்கு பதில்,, மைதா மாவுக்கு பதில் கோதுமை மாவு, மக்காச்சோளம் மாவு போன்றவற்றையும் சேர்க்கலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“