இப்படி கேசரி செய்தால், மிகவும் மிருதுவாக இருக்கும். ரொம்ப ஈசியான ரெசிபி இதோ.
தேவையான பொருட்கள்
1 கப் ரவை ( வறுத்தது)
3 கப் தண்ணீர்
அரை கப் நெய்
கால் கப் எண்ணெய்
12 முந்திரி பருப்பு
1 ½ அரை ஸ்பூன் திராட்சை
ஒரு சிட்டிகை உப்பு
2 கப் சர்க்கரை
குங்குமப் பூ சேர்த்த தண்ணீர்
3 ஏலக்காய் இடித்தது
செய்முறை: ஒரு பாத்திரத்தில் எண்ணெய், நெய் இரண்டையும் ஊற்ற வேண்டும். அதில் முந்திரி பருப்பு, திராட்சை சேர்த்து வறுக்க வேண்டும். இதை தனியாக எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். இதே பாத்திரத்தில் ரவையை சேர்த்து நன்றாக வறுக்க வேண்டும். நன்றாக வாசனை வரும் அளவில் அதை வறுக்க வேண்டும். தீயை மிதமான அளவில் வைத்துகொள்ளுங்கள். தொடர்ந்து மீண்டும் மிச்ச மிருக்கும் நெய்யை சேர்த்து வறுக்க வேண்டும். ரவையின் நிறம் மாறும் வரை வறுக்கவும். இனியொரு அடுப்பில் 3 கப் தண்ணீரை கொதிக்க வைக்கவும். நன்றாக கொதிக்கும் நீரை, கிண்டும் கேரசி பாத்திரத்தில் கொட்டவும். தொடர்ந்து கிளரவும். தொடர்ந்து இரு சிட்டிகை உப்பு சேர்த்து கிளரவும். தற்போது மூடி போட்டு மூடவும். 7 நிமிடங்கள் வரை அப்படியே இருக்க வேண்டும். தொடர்ந்து இதில் சர்க்கரை சேர்க்கவும். இதை நன்றாக கிளர வேண்டும். தொடர்ந்து கொதிக்கும் நீரில் ஊறவைத்த குங்குமப்பூவை அப்படியே சேர்க்கவும். இது கேசரிக்கு நிறம் கொடுக்கும். தொடர்ந்து நெய்யை சேர்த்து கிளரவும். கடைசியாக வறுத்த முந்திரி, திராட்சை, ஏலக்காய் இடித்ததை சேர்க்கவும். மிருதுவான கேசரி ரெடி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“