ஸ்வீட் ரெசிப்பிகளில் மிகவும், எளிமையாக செய்யக்கூடியது ரவா லட்டுதான். இதை செய்ய வெறும் 20 நிமிடங்கள் போதுமானது.
தேவையான பொருட்கள்
நெய்
பாம்பே ரவை
முந்திரி
திராட்சைகள்
சர்க்கரை
செய்முறை : ஒரு பாத்திரத்தில் 2 ரேபிள் ஸ்பூன் அளவுக்கு நெய் சேர்க்கவும். தொடர்ந்து 15 முதல் 16 முந்திரி சேர்க்க வேண்டும். தொடர்ந்து திராட்சை பழங்கள் சேர்க்கவும். தொடர்ந்து பாம்பே வகை ரவியை சேருங்கள். மிதமான தீயில் வைத்து அதை தொடர்ந்து வறுக்க வேண்டும். தொடர்ந்து நிறம் மாறும். ஒரு மிக்ஸியில் அரை கப் சர்க்கரை எடுத்து அதை, ஒரு சுத்து சுற்றி அரைக்கவும். தற்போது ரவை கலவையில், அரைத்த சர்க்கரையை சேர்க்கவும். சர்க்கரையை சேர்க்கும்போது அடுப்பை அணைக்கவும். தொடர்ந்து 2 அல்லது மூன்று ஸ்பூன் நெய்யை உருக்கி இந்த கலவையில் சேர்க்க வேண்டும். சிறிது நேரம் கழித்து உருண்டைகளாக பிடித்துகொள்ளுங்கள்.; நெய்யில் செய்வதால் 10 நாட்களுக்கு மேலாகவே ரவை லட்சு கெட்டுப்போகாமல் இருக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“