ரவை உப்புமா என்றால் நிறைய பேருக்கு பிடிக்காது காலை உணவாக பெரும்பாலானோர் வீட்டில் ரவை உப்புமா செய்வது வழக்கமான ஒன்றாகும்.
என்னதான் சட்னி, சாம்பார், வெரைட்டி ஸ்டைலில் ரவை செய்தாலும் வீட்டில் யாருக்கும் பிடிக்கவில்லை என இனி கவலை வேண்டாம். எல்லோருக்கும் பிடித்தமான ஸ்டைலில் ரவை உப்புமா செய்ய இந்த டிப்ஸை ஃபாளோ பண்ணுங்க.
அப்படிப்பட்ட ரவை உப்புமாவை எல்லோருக்கும் பிடித்த மாதிரி சுவையாக அதுவும் செஃப் தீனா ஸ்டைலில் எப்படி செய்வது என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
ரவை
கேரட்
பீன்ஸ்
பச்சை பட்டாணி
உளுத்தம் பருப்பு
பருப்பு
பெரிய வெங்காயம்
தக்காளி
பச்சை மிளகாய்
கறிவேப்பிலை
கொத்தமல்லி இலை
பெருங்காயத்தூள்
கடுகு
உப்பு
எண்ணெய்
நெய்
நீங்கள் எப்போதும் வீட்டில் சமைக்கும் அளவு முறையையே இதற்கும் பயன்படுத்தலாம்.
செய்முறை
பொடி ரவையை மீடியம் ஃப்ளேமில் வறுத்து எடுத்துக் கொள்ளவும். பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, கருவேப்பிலை, கீறிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கி அதில் முந்திரி பருப்பு சிறிது சேர்த்து வதக்கிக் கொள்ளவும். இவை அனைத்தும் நன்கு வதங்கிய பிறகு அதில் நறுக்கிய கேரட், பீன்ஸ், உப்பு, பெருங்காயத்தூள் சிறிது சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேக விடவும்.
கொதி வந்ததும் அதில் ரவையை சிறிது சிறிதாக போட்டு கிளற வேண்டும். பின்னர் ஒரு ஸ்பூன் நெய் ஊற்றி கிளறி எடுத்தால் ரவை உப்புமா ரெடியாகிவிடும். கடைசியாக தேவைப்பட்டால் சிறிது கொத்தமல்லி தழைகளையும் நறுக்கிய தக்காளியையும் சேர்த்து கிளறிவிடலாம் இது பார்ப்பதற்கு நன்றாக இருக்கும்.
சட்னிக்கு தேவையான பொருட்கள்
வேர்க்கடலை
தேங்காய்
வெங்காயம்
இஞ்சி
காய்ந்த மிளகாய்
புளி
கறிவேப்பிலை
கடுகு
உளுத்தம் பருப்பு
உப்பு
எண்ணெய்
செய்முறை
ஒரு கடாயில் பச்சை வேர்க்கடலையை போட்டு மிதமான சூட்டில் வறுத்து எடுக்கவும். பின்னர் தோலை நீக்கி ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து தேங்காய், இஞ்சி, சின்ன வெங்காயம், புளி, காய்ந்த மிளகாய், கருவேப்பிலை, உப்பு சிறிது தண்ணீர் ஊற்றி கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
என்னோட Favourite வேர்க்கடலை சட்னி & ரவா உப்புமா | Peanut Chutney | Rava Upma |Chef Deena's Kitchen
கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து தாளித்து அதில் காய்ந்த மிளகாய் கிள்ளி போட்டு கருவேப்பிலை போட்டு கலந்து இந்த தாளிப்பை சட்னியில் சேர்த்தால் போதும் மணமணக்க வேர்க்கடலை சட்னி ரெடியாகிவிட்டது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“