செரிமானத்திற்கு உதவும் இந்தக் காயின் தோல்... இனிமேல் தூக்கி வீசாதீங்க; இப்படி துவையல் செஞ்சு சாப்பிட்டு பாருங்க!

வாழைக்காய் தோலில் இருந்து எவ்வாறு சுவையான துவையல் செய்து சாப்பிடலாம் என்று இந்த சமையல் குறிப்பில் பார்க்கலாம். இதன் சுவை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் வகையில் இருக்கும்.

வாழைக்காய் தோலில் இருந்து எவ்வாறு சுவையான துவையல் செய்து சாப்பிடலாம் என்று இந்த சமையல் குறிப்பில் பார்க்கலாம். இதன் சுவை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் வகையில் இருக்கும்.

author-image
WebDesk
New Update
Banana peel chutney

நம் எல்லோரது வீடுகளிலும் சமையலில் வாழைக்காயை பெரும்பாலும் பயன்படுத்துவோம். ஆனால், அந்த வாழைக்காய் தோலில் இருந்து ஒரு ரெசிபி தயாரிக்க முடியும் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? அந்த வகையில், வாழைக்காய் தோலில் இருந்து சுவையான துவையல் எப்படி செய்யலாம் என்று இதில் காணலாம்.

Advertisment

தேவையான பொருட்கள்:

வாழைக்காய் தோல் 

சின்ன வெங்காயம் - அரை கப் 

Advertisment
Advertisements

பூண்டு - 5

காய்ந்த மிளகாய் - காரத்திற்கு தேவையான அளவு

புளி - சிறிதளவு

தேங்காய் துருவல் - 2 டேபிள் ஸ்பூன்

நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்

கடுகு - அரை டீஸ்பூன்

உளுத்தம் பருப்பு - அரை டீஸ்பூன்

கறிவேப்பிலை - சிறிதளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

வாழைக்காய் தோலை நன்றாக கழுவி விட்டு அதன் பின்னர், சிறிய துண்டுகளாக நறுக்க வேண்டும். அதன்பின்னர், இவற்றை உடனடியாக தண்ணீரில் போட்டு வைக்க வேண்டும். இதையடுத்து, ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து, அதில் நறுக்கிய வாழைக்காய் தோல்களை தேவையான அளவு உப்பு போட்டு, 7 நிமிடங்கள் வேக வைக்க வேண்டும். தோல் நன்றாக வெந்ததும், தண்ணீரை வடிகட்டி விடலாம்.

இனி, அடுப்பில் இரு கடாய் வைத்து அதில் நெல்லெண்ணெய் ஊற்றி சூடாக்க வேண்டும். எண்ணெய் சூடேறியதும் காய்ந்த மிளகாய் சேர்த்து வறுக்க வேண்டும். இப்போது, அதே கடாயில் சின்ன வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து அவை பொன்னிறமாக மாறும் வரை வதக்க வேண்டும்.

இதையடுத்து, வதக்கிய வெங்காயம், பூண்டு, காய்ந்த மிளகாய், வாழைக்காய் தோல், புளி, தேங்காய் துருவல் மற்றும் உப்பு ஆகியவை சேர்த்து மிக்ஸியில் அரைக்க வேண்டும். அடுத்தபடியாக, கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை ஆகியவற்றை எண்ணெய்யில் தாளித்து அரைத்து வைத்திருக்கும் துவையலில் ஊற்ற வேண்டும்.

இவ்வாறு செய்தால் சுவையான வாழைக்காய் துவையல் தயாராகி விடும். இதன் சுவை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் வகையில் இருக்கும்.

Food

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: