வாழைக்காய்யில் நார்சத்து, கார்போஹைட்ரேட் இருக்கிறது. ஆனால் நாம் வாழைக்காய்களை எண்ணெய்யில் வறுத்து சாப்பிட்டால் எந்த சத்தும் நமது உடலுக்கு செல்லாது. இதனால் இப்படி அவித்து பொறியல் செய்யவும்.
தேவையான பொருட்கள்
வாழைக்காய் – 4
துருவிய தேங்காய் – 3 ஸ்பூன்
கடலை பருப்பு
கடுகு
பச்சை மிளகாய்
பெருங்காயம்
சின்ன வெங்காயம்
எண்ணெய்
செய்முறை : வாழைக்காய்களை நன்றாக கழுவி, சிறிது மஞ்சள் தூள் சேர்த்து வேக வைக்கவும். தொடர்ந்து வாழைக்காய்களில் தோலை நீக்கி அதன் வெள்ளை சதையை மற்றும் எடுத்து வைக்கவும். தொடர்ந்து ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி, கடுகு, கடலை பருப்பு, உளுந்தம்பருப்பு, சேர்த்து வதக்கவும். தொடர்ந்து சின்ன வெங்காயம் நறுக்கியதை சேர்த்து வதக்கவும். தொடர்ந்து இதில் வேகவைத்த வாழைக்காய்களை சேர்க்கவும். தொடர்ந்து நன்றாக வதக்க வேண்டும். தொடர்ந்து அதில் துருவிய தேங்காய் சேர்க்கவும். இப்போது சிறிது பெருங்காயம் சேர்க்கவும்.