நாகர்கோவில் பகுதியில், இந்த பலாக்காய் பிரியாணி மிகவும் பிரபலம். இதன் ரெசிபியை தெரிந்துகொண்டு நீங்களும் இதை செய்திபாருங்கள்.
தேவையான பொருட்கள்
பலாக்காய்- 2
வெங்காயம் – 3
தக்காளி – 3
இஞ்சி, பூண்டு விழுது
பட்டை, கிராம்பு, அண்ணாச்சிப் பூ, ஏலகாய், பிரியாணி இலை
புதினா, கொத்தமல்லி
மிளகாய் பொடி,
மல்லித் தூள்
கரம் மசாலா
உப்பு
பச்சை மிளகாய்
பாஸ்மதி ரைஸ்- 2 கப்
செய்முறை முதலில் பலாக்காய்-ஐ நன்றாக கழுவி, முள்ளு போல் இருக்கும் வெளிப்புறத்தை நீக்க வேண்டும், தொடர்ந்து பலாக்காய்யை துண்டுகளாக வெட்ட வேண்டும். அதை சிறிது எண்ணெய்யில் வதக்க வேண்டும். இந்நிலையில் பாஸ்மதி அரிசியை ஊறவைக்க வேண்டும். தொடர்ந்து ஒரு குக்கரில், எண்ணெய் விட்டு, அதில் பட்டை, கிராம்பு, அண்ணாச்சிப் பூ, ஏலக்காய், பிரியாணி இலை ஆகியவற்றை சேர்க்க வேண்டும். தொடர்ந்து பச்சை மிளகாய் சேக்கவும், பின்பு இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். தொடர்ந்து வெங்காயம் சேர்க்கவும். நிறம் மாறியதும் தக்காளி சேர்த்து வதக்கவும். தொடர்ந்து மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா சேர்த்து வதக்க வேண்டும். பச்சை வாசனை போனதும், வதக்கிய பலாக்காய்யை சேர்க்க வேண்டும். தொடர்ந்து வதக்க வேண்டும். சிறிது நேரம் கழித்து ஊறவைத்த பாஸ்மதி ரைஸ், கொத்தமல்லி, புதினா சேர்த்து தண்ணீர் ஊற்ற வேண்டும். 3 விசில் விட்டு எடுத்தால் . சுவையான பலாக்காய் பிரியாணி ரெடி .