சீசன் ஸ்பெஷல் பலாக்காய் வைத்து சுவையான ஒரு பலாக்காய் கறி எப்படி செய்வது என்று ஹோம் குக்கிங் தமிழ் யூடியூப் பக்கத்தில் செய்து காட்டியிருப்பது பற்றி பார்ப்போம். இதுவரை இந்த பலாக்காய் கறி செய்தது இல்லை என்றாலும் பரவாயில்லை இந்த சீசனில் இதை வாங்கி ட்ரை பண்ணுங்க.
Advertisment
தேவையான பொருட்கள்
பலாக்காய் உப்பு மஞ்சள் தூள் இஞ்சி பூண்டு காஷ்மீரி சிவப்பு மிளகாய் மிளகு சீரகம் தனியா பட்டை கிராம்பு ஏலக்காய் எண்ணெய் பிரியாணி இலை வெங்காயம் தக்காளி கொத்தமல்லி இலை
செய்முறை
Advertisment
Advertisements
ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து நறுக்கிய பலாக்காய், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து 10 நிமிடம் வேகவைக்கவும். மசாலா விழுது அரைக்க மிக்ஸி ஜாரில் இஞ்சி, பூண்டு, காஷ்மீரி சிவப்பு மிளகாய், மிளகு, சீரகம், தனியா, பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து அரைக்கவும்.
பின்பு தண்ணீர் ஊற்றி விழுதாக அரைக்கவும். ஒரு பானில் கடுகு எண்ணெய் ஊற்றி வேகவைத்த பலாக்காயை சேர்த்து 5 நிமிடம் பிரட்டவும். அடுத்து அதே பானில் கடுகு எண்ணெய் ஊற்றி பிரியாணி இலை, சீரகம், வெங்காயம் சேர்த்து 5 நிமிடம் வதக்கவும்.
பிறகு அரைத்த மசாலா விழுது, உப்பு சேர்த்து கலந்து விடவும். தக்காளி சேர்த்து நன்கு மசியும் வரை வதக்கவும். தண்ணீர் சேர்த்து கலந்து விட்டு 10 நிமிடம் வேகவிடவும். எண்ணெயில் பிரட்டிய பலாக்காயை சேர்த்து கலந்து விட்டு தண்ணீர் சேர்த்து கலந்து விட்டு 10 நிமிடம் வேகவிடவும்.
இறுதியாக கொத்தமல்லி இலை சேர்த்து கலந்து விடவும். அவ்வளவு தான் சுவையான பலாக்காய் கறி தயார்.