பச்சை மாங்காய் சாப்பிடலாமா ? வேண்டாமா? என்ற கேள்வி எழும். இந்த கோடை காலத்தில் பல்வேறு வகையான மாங்காய் கிடைக்கிறது. இந்நிலையில் பழுக்காத மாங்காயில் பல்வேறு நன்மைகள் இருக்கிறது.
பச்சை மாங்காயில் வைட்டமின் சி இருக்கிறது. இது நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது. இதில் ஜீரணிக்கும் என்சைம் இருப்பதால், புரத சத்தை உடைத்து, ஜீரணத்திற்கு உதவுகிறது. பச்சை மாங்காயில் நார்சத்து இருக்கிறது. இதனால் வயிற்றின் செயல்பாடுகளை சீராக்குகிறது.
இந்நிலையில் பச்சை மாங்காயில், பெக்டின் இருப்பதால் அது கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்துகிறது. மேலும் கொலஸ்ட்ரால் அளவை குறைக்கிறது. பச்சை மாங்காயில் குளுமையாக்கும் பண்பு இருப்பதால், ஹீட் ஸ்டோக் அதாவது வெப்ப அயர்ச்சி ஏற்படாமல் தடுக்கிறது.
பச்சை மாங்காயில் வைட்டமின் ஏ சத்து இருப்பதால் கண் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இந்நிலையில் இதில் இருக்கும் வைட்டமின் இ, சிபம் ( sebum) உற்பத்தியை சீராக்குகிறது. இதனால் பருக்கள் ஏற்படாமல் தடுக்கிறது.
இதில் பொட்டாஷியம் இருப்பதால், ரத்த அழுத்தத்தை சீராக்குகிறது. இதயத்தின் செயல்பாட்டை அதிகப்படுத்துகிறது. இதில் அதிக அளவில் வைட்டமின் பி6 இருப்பதால், கல்லீரல் அரோக்கியத்திற்கு உதவுகிறது.
மேலும் இதில் இருக்கும் வைட்டமின் சி கொலஜன் என்ற புரத சத்தை உருவாக்குகிறது, இதனால் நமது சருமம் ஆரோக்கியமாக இருக்கும்.
இதில் ஆண்டி ஆக்ஸிடண்ட் உள்ளது. குறிப்பாக க்யூயர்சிடின், ஐசொ க்யூயர்சிடின், ஆஸ்டாகாலின், பெசிடின், காலிட் ஆசிட் ஆகியவை புற்று நோய் ஏற்படாமல் பாதுகாக்கிறது.