இந்நிலையில் நாம் முளைகட்டிய பயிர்களை தேர்வு செய்வது, ஆரோக்கியமான வாழ்வுக்கு முதல் படியாகும். பட்டானி, பீன்ஸ், முழுதானியங்கள், காய்கறிகள், நட்ஸ் மற்றும் விதைகளில் இருந்து நாம் முளைகட்டிய வகை உணவுகளை பெற முடியும்.
இந்நிலையில் நாம் இதுபோன்று ஒரு பயிறு வகையை முளைகட்டியதாக மாற்றும்போது, அதன் சத்துக்கள் அதிகரிக்கிறது. அதன் சத்துக்களை அதிகப்படுத்துவதோடு,அது சீக்கிரம் ஜீரணமாக்க உதவுகிறது.
இந்நிலையில் முளைகட்டிய உணவுகள் பொருட்கள் எச்.டி.எல், நல்ல கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கிறது. மேலும் இதய ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. மேலும் ரத்த அழுத்தத்தை சீராக வைத்துக்கொள்ள உதவுகிறது.
இதில் நமக்கு வேகவைத்த முளைகட்டிய பயிர்களை சாப்பிடலாமா ? அல்லது பச்சையாக சாப்பிடலாமா? என்ற கேள்வி எழும். இந்நிலையில் பச்சையான முளைகட்டிய வகைகளில், சால்மொனெல்லா மற்றும் இ.கோலி பாக்டீரியா இருக்கலாம். இவை நம்மை பாதிக்கலாம். மேலும் உணவு விஷமாக கூட மாறலாம்.
இந்நிலையில் பச்சையான முளைகட்டிய உணவுகள், ஜீரணிக்க அதிக நேரம் எடுத்துக்கொள்வதால், அதை அவித்து சாப்பிடுவது சரியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
மேலும் அவித்தால், வைட்டமின் சி அளவு குறையவும் வாய்ப்புள்ளது. கர்ப்பிணிகள், குழந்தைகள், ஜீரணம் தொடர்பாக சிக்கல் இருப்பவர்கள் அவித்து சாப்பிடுவதுதான் சரியாக இருக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“