ஆரோக்கியமான உணவுகள் சாப்பிடுவது உடல் நலத்தை மேம்படுத்தும். காலையில் சத்து நிறைந்த ஆரோக்கிய உணவுகள் சாப்பிடுவது சிறந்த தொடக்கம் மற்றும் நாள் முழுவதும் ஆற்றல் உடன் இருக்க உதவும். இந்த வரிசையில் நட்ஸ் வகைகள் பெரும் பங்கு வகிக்கிறது. பாதாம், முந்திரி போன்ற நட்ஸ் வகைகளில் ஊட்டச் சத்துக்கள் நிறைந்துள்ளன. இவற்றை தினமும் சாப்பிடுவது நினைவாற்றல், செரிமானம் மற்றும் ஆற்றலை மேம்படுத்த உதவுகிறது.
இருப்பினும் இவற்றை எவ்வாறு சாப்பிடுவது என்பது பலருக்கும் தெரியாது. நட்ஸ் வகைகளில் ஊட்டச் சத்துக்கள் நிறைந்திருந்தாலும், அவற்றை சரியான முறையில் சாப்பிட வில்லை என்றால் அதன் பலன் கிடைக்காது. பாதாம், முந்திரி சாப்பிடும் முன் அவற்றை கட்டாயம் ஊற வைத்து தான் சாப்பிட வேண்டும் என்று உணவியல் நிபுணர் கரிமா கோயல் கூறுகிறார்.
ஏன் ஊற வைத்து சாப்பிட வேண்டும்?
ஊற வைக்கும் போது பாதாம், முந்திரியில் உள்ள பைடிக் அமிலம் குறைகிறது. ஊற வைக்காமல் சாப்பிடும் போது இந்த அமிலம்
அத்தியாவசிய தாதுக்களுடன் பிணைந்து உங்கள் குடல் வழியாக சென்று ஒட்டிக் கொள்கிறது என்று நிபுணர் கரிமா கூறுகிறார். மற்றொரு டயட்டீஷியன் மற்றும் நிபுணர் டாக்டர் ஷில்பா பன்சால் சவான் கூறுகையில், நட்ஸை ஊற வைத்து தான் சாப்பிட வேண்டும். ஊற வைக்கும்போது அதன் தோலில் (வெளிப்புறத்தில்) உள்ள பைடிக் அமிலம் நீங்கி விடுகிறது. இதனால் ஊற வைத்த நட்ஸ் ஆரோக்கியமானவை என்று விளக்கினார்.
நட்ஸில் மெக்னீசியம், செலினியம் மற்றும் ஜிங்க் போன்ற தாதுக்கள் உள்ளன. இவை ஊறவைக்கும்போது நன்றாக உறிஞ்சப்படுகின்றன.
ஊற வைப்பதால், பைடிக் அமிலம் மற்றும் டானின்கள் நீங்கி விடுகிறது. இதனால் அஜீரணக் கோளாறு ஏற்படாமல் தடுக்கப்படுகிறது.
6-10 நட்ஸ்
மேலும், ஊற வைப்பதால் பாதாம், முந்திரி பருப்புகளிள்ல சுவை கூடுகிறது என கரிமா குறிப்பிட்டார்.
தினமும் 6-10 நட்ஸ் வரை எடுத்துக் கொள்ளலாம். முந்திரி, பாதாம், மக்காடாமியா அல்லது வால்நட்ஸ் போன்ற பல்வேறு வகையான நட்ஸ் வகைகள் கலந்து சாப்பிடலாம்.
காலை வேளைகளில் சாப்பிடுவது சிறந்தது. அல்லது காலை உணவு, மதிய உணவிற்கு முன் சாப்பிடலாம். இரவு உணவிற்கு முன் மாலையில் 4-5 மணிக்குள் சாப்பிடலாம் என என்று டாக்டர் சவான் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“