இனி சேமியா வைத்து, இப்படி செய்து சாப்பிடுங்க. செம்ம சுவையா இருக்கும்.
தேவையான பொருட்கள்
ராகி சேமியா- 1 கப்
பீன்ஸ், கேரட், உருளைக் கிழங்கு – 1/2 கப்
பச்சை பட்டாணி – 1/4 கப்
பெரிய வெங்காயம் – 2
தக்காளி – 1
பட்டை – 1
ஏலக்காய், கிராம்பு- 2
கரம் மசாலா துாள் – 1/2 ஸ்பூன்
பச்சை மிளகாய் – 2
இஞ்சி, பூண்டு பேஸ்ட் – 1 ஸ்பூன்
மஞ்சள் துாள் – 1/4 டீஸ்பூன்
மிளகாய் துாள் – 1/2 டீஸ்பூன்
எண்ணெய், கல் உப்பு, கொத்தமல்லி தழை- தேவையான அளவு
புதினா – தேவையான அளவு
செய்முறை
அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, ஏலக்காய், கிராம்பு சேர்த்து தாளிக்க வேண்டும். அடுத்து வெங்காயம் போட்டு வதக்கி இஞ்சி, பூண்டு விழுது சேர்க்கவும். பின்னர் ஞ்சள் துாள், மிளகாய் துாள், கரம் மசாலாத்துாள், தக்காளி, பச்சை பட்டாணி, பீன்ஸ், கேரட், உருளைக் கிழங்கு, புதினா, போட்டு வதக்க வேண்டும். தேவையான அளவு உப்பு சேர்த்து, சேமியாவிற்கு தேவையான நீர் ஊற்றவும். இப்போது தண்ணீர் கொதித்தவுடன், ராகி சேமியாவை சேர்த்து எப்போதும் போல் கிளறிவும். கடைசியாக கொத்தமல்லி தழை துாவி இறக்கினால் பிரியாணி ஸ்டைலில் ராகி சேமியா தயார்.