நீண்ட நேரம் நின்று கொண்டே பணியாற்றுபவர்கள் தங்களுக்கு ஏற்படும் கால் வலி பிரச்சனையில் இருந்து தற்காத்துக் கொள்ள தினசரி ஒரு செவ்வாழைப் பழம் சாப்பிட்டால் உடலக்கு நல்லது என மருத்துவர் சிவராமன் தெரிவித்துள்ளார்.
அதிக உடல் உழைப்பு இல்லாமல் இருப்பவர்களுக்கு பிரச்சனை ஏற்படுகிறது என்றால், மிக அதிகமாக உடலுக்கு உழைப்பு கொடுப்பவர்களுக்கு வேறு மாதிரியான பிரச்சனைகள் உருவாகும்.
குறிப்பாக, ஆசிரியர்கள், காவலாளிகள், துணி மற்றும் நகைக்கடைகளில் வேலை பார்ப்பவர்கள் என பலருக்கு கடுமையான கால் வலி ஏற்படும். இதனால் இரவு நேர தூக்கமின்மையில் தொடங்கி மற்ற பணிகளில் ஈடுபட முடியாதது வரை பல்வேறு பிரச்சனைகள் உருவாகும்.
இதனை சரி செய்ய நாள்தோறும் ஒரு செவ்வாழை பழம் சாப்பிட்டால் உடல் நலனுக்கு நன்மை ஏற்படும் என மருத்துவர் சிவராமன் அறிவுறுத்தியுள்ளார். குறிப்பாக செவ்வாழையில் அதிக அளவு உயிர் சத்து, வைட்டமின் சி, இரும்பு சத்து, நார்சத்து, பொட்டாசியம், பீட்டா கரோட்டின் என பல்வேறு சத்துகள் காணப்படுகின்றன.
செவ்வாழை சாப்பிடுவதன் மூலம் பல சத்துகள் நம் உடலுக்கு கிடக்கும். அதே நேரத்தில், செவ்வாழையை ஜூஸ் போன்று அரைத்துக் குடித்தால் அது மிகவும் சுவையாகவும் இருக்கும். இதனை செய்ய தேவையான பொருள்கள்,
ஒரு செவ்வாழைப்பழம்,
7 அல்லது 8 பேரீச்சம்பழம்
4 பாதாம் பருப்புகள்
நாட்டுச்சர்க்கரை
ஒரு கிளாஸ் பால்
செவ்வாழைப் பழத்தை சிறிய துண்டுகளாக நறுக்கி விட்டு மிக்ஸியில் போட்டு அத்துடன் பேரீச்சம்பழம், பாதாம் பருப்புகள், தேவையான அளவு நாட்டுச்சர்க்கரை, ஒரு கிளாஸ் பால் ஆகியவை சேர்த்து நன்றாக அரைக்க வேண்டும். இக்கலவையை, ஒரு கிளாஸில் ஊற்றி பருகினால் சுவையான செவ்வாழை மில்க்ஷேக் தயாராகிவிடும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“