இடியாப்பம் என்றால் நிறைய வெரைட்டி சாப்பிட்டு இருப்பீர்கள். ஆனால் செவ்வாழை இடியாப்பம் சாப்பிட்டு இருக்கிறீர்களா? செவ்வாழையில் அவ்வளவு சத்துக்கள் உள்ளது. இதயத்திற்கு மிகவும் நல்லது.
அப்படிப்பட்ட செவ்வாழையை வைத்து செவ்வாழை இடியாப்பம் செய்வது பற்றி சக்கர சாதமும் வடகறியும் யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பதாவது,
தேவையான பொருட்கள்
இடியாப்பம் மாவு
செவ்வாழை
நெய்
சுடுதண்ணீர்
உப்பு
செய்முறை
முதலில் தேவையான அளவு செவ்வாழை பழத்தை எடுத்து வேகவைத்து எடுக்கவும். பின்னர் அதனை எடுத்து ஆறவைத்து தோலுரித்து மசித்து வைக்கவும்.
ஒரு பவுலில் இடியாப்பம் மாவு, தோலுரித்த செவ்வாழை, உப்பு, நெய் ஆகியவற்றை சேர்த்து நெய் ஊற்றி பிசைந்து கொள்ளவும்.
விஜய் டிவி பாக்கியலட்சுமி செவ்வாழை இடியாப்பம் தேங்காய்ப்பால்
இடியாப்பாம் மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும். காயாமல் இருப்பதற்கு மேலே துணி போட்டு மூடி வைக்கவும். பிசைந்த மாவை ஒரு 10 நிமிடம் ஊறவிட்டு முறுக்கு ஒலக்கில் பிழிந்து இட்லி சட்டியில் வைத்து வேகவிடவும்.
தேங்காய் பால் செய்ய தேவையான பொருட்கள்
தேங்காய் துருவல்
ஏலக்காய்
சுக்கு தூள்
நாட்டுச்சர்க்கரை
செய்முறை
தேங்காய் துருவல், ஏலக்காய், நாட்டு சர்க்கரை, சுக்கு தூள் சேர்த்து நன்றாக அரைத்து அதை வடிகட்டி வைக்கவும். இதில் தேவைப்பட்டால் பசும் பால் சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கினால் தேங்காய் பால் ரெடி.
இப்போது இது இரண்டையும் சேர்த்து சாப்பிடலாம். இதய நலத்திற்கும், வயிறு புண் குணமாகும்.