சப்பாத்தி தாயார் செய்யும் போது, அவை சாஃப்டாக வர வேண்டும் என எதிர்பார்ப்பது உண்டு. ஆனால் சில சமயங்களில் அவை நாம் எதிர்பார்த்தது போல சாஃப்டாக வருவதில்லை. அதனாலேயே சிலர் சப்பாத்தி மாவுகள் பிசைவதில்லை.
ஆனால் சாஃப்ட் மற்றும் லேயராக சப்பாத்தி வருவதற்கு சப்பாத்தி மாவு பிசைவதில் பதம் தேவை. மாவு பிசையும்போது சரியான அளவில் எல்லாவற்றையும் சேர்க்க வேண்டும்.
தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு - 3 கப்
உப்பு - 2 1/2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் அல்லது நெய் - 2 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் - 2 கப்
செய்முறை
ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு எடுத்து அதில் கொஞ்சம் உப்பு, எண்ணெய் சேர்த்து கலந்து விடவும். பின்னர் அதில் தண்ணீர் சேர்த்து பிசைய ஆரம்பிக்கலாம். கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து பிசைய வேண்டும். நன்கு பிசைந்து கலந்து விட்டு பிசைய வேண்டும்.
மாவு கையில் ஒட்டாத அளவுக்கு பிசையவும். பிசைந்த மாவு அப்படியே தனியாக ஒரு பாத்திரம் கொண்டு சுமார் 15 நிமிடங்களுக்கு ஊற வைத்து விடவும்.
சாப்ட் லேயர் சப்பாத்தி அதிக நேரத்திற்கு துணி மாதிரி சாப்டா இருக்கும் // soft layer square chapati
நன்கு ஊறி வந்த மாவில், வழக்கம் போல் சப்பாத்திகளை தேய்க்க ஆரம்பிக்கவும். அதற்கு முதலில் ஒரு உருண்டை பிடிக்க வேண்டும். உருண்டை மாவுகளை தேய்த்து நான்கு 5 மடிப்புகளாக வைத்து தேய்க்கவும். பிறகு சூடான தோசைக் கல்லில் தேய்த்த சப்பாத்தி மாவுகளை போட்டு எடுத்தால், சூடான மற்றும் சாஃப்ட் சப்பாத்தி ரெடி.
அடுப்பில் சப்பாத்தி கல் வைத்து அதில் எண்ணெய் சேர்க்காமல் சப்பாத்தி போடவும். ஆனால் அதற்கு முன்னதாகவே 2-3 ட்ராப் எண்ணெய் தடவி வைக்க வேண்டும். இப்போது சப்பாத்தி போட்டு எடுத்தால் நல்ல சாஃப்ட் ஆன சப்பாத்தி ரெடியாகிவிடும்.
இந்த முறையில் சப்பாத்தி செய்தால் அடிக்கடி செய்யத்தோன்றும் ஈஸியாகவும் இருக்கும்.