தோசைக்கு மாவு அரைக்க கஷ்டமாக இருக்கா? அப்போ இந்த மாதிரி பச்சரிசி வைத்து மாவு அரைத்து அரிசி தோசை ஊற்றி பாருங்கள். சுவையான அரிசி தோசை எப்படி செய்வது என்று ஹோம் குக்கிங் தமிழ் யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பது பற்றி பார்ப்போம்
Advertisment
தேவையான பொருட்கள்
பச்சரிசி - 1 கப் வேகவைத்த சாதம் - 1 கப் துருவிய தேங்காய் - 3/4 கப் உப்பு - 1 தேக்கரண்டி தண்ணீர் எண்ணெய்
செய்முறை:
Advertisment
Advertisements
பச்சரிசியை நன்கு கழுவி 1 மணிநேரம் ஊறவிடவும். மிக்ஸியில் ஊறவைத்த அரிசி, வேகவைத்த சாதம், துருவிய தேங்காய், உப்பு சேர்த்து சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து நன்கு அரைக்கவும். பின்பு மற்றொரு பாத்திரத்திற்கு மாற்றி 8 மணிநேரம் புளிக்கவிடவும்.
மாவு நன்கு புளித்து வந்ததும் பிறகு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கலந்து தோசை மாவு பதத்திற்கு கரைத்து கொள்ளவும். பின்பு தோசை கல்லை சூடு செய்து சிறிதளவு எண்ணெய் தடவி, பிறகு மாவை ஊற்றி மூடி வைத்து வேகவிடவும்.
வெந்துடும் சூடாக எடுத்து பரிமாறவும். அரிசி தோசை தயார். எப்போதும் தோசை சுடுவது போல தோசை சுட்டு எடுக்கலாம். தோசை வெள்ளையாக தீயாமல் வரும்.