/indian-express-tamil/media/media_files/2025/04/10/vBpiQ6V4Ol5sYPJar6Qx.jpg)
அரிசி மாவைப் பயன்படுத்தி ரொம்ப சாஃப்ட்டான சப்பாத்தி செய்வது எப்படி? Image Souce: Screengrab from Youtube @Y2K Samayal
உங்கள் வீட்ட்ல் கோதுமை சப்பாத்தியே செய்து போரடித்துவிட்டதா, ஒரு மாற்றத்துக்கு புதுசா அரிசி மாவில் சாஃப்ட் சப்பாத்தி இப்படி செய்து பாருங்கள், கையால் அழுத்தினாலும் உடையாது.
அரிசி மாவைப் பயன்படுத்தி ரொம்ப சாஃப்ட்டான சப்பாத்தி செய்வது எப்படி என்று ஒய்2கே சமையல் (Y2K Samayal) என்ற யூடியூப் சேனலில் செய்து காட்டியுள்ளனர்.
அரிசி மாவில் சாஃப்ட் சப்பாத்தி செய்வது எப்படி?
செய்முறை:
ஒரு சின்ன கப் மிக்ஸி ஜார் எடுத்துக்கொள்ளுங்கள். அதில் 1 டீஸ்பூன் சீரகம் போடுங்கள். ஒரு துண்டு இஞ்சி, காரத்துக்கு 1 பச்சை மிளகாய், கொஞ்சம் கருவேப்பிலை போடுங்கள். நன்றாக அரைத்து எடுத்துக்கொள்ளுங்கள்.
அடுத்து சப்பாத்திக்கு தேவையான மாவு தயார் செய்ய வேண்டும். ஸ்டவ்வில் ஒரு பான் எடுத்து வையுங்கள், அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றுங்கள். அரைத்து வைத்துள்ள பேஸ்ட்டை போடுங்கள். பச்சை வாசனை போகும் வரை நன்றாக வதக்குங்கள்.
1 1/2 கப் தண்ணீர் ஊற்றுங்கள். தேவையான அளவு உப்பு போடுங்கள். நன்றாகக் கலந்துவிடுங்கள். நன்றாகக் கொதித்த பிறகு, ஸ்டவ்வை சிம்மில் வைத்துவிட்டு, 1 கப் அளவு அரிசி மாவு போடுங்கள். கட்டி பிடிக்காத அளவுக்கு நன்றாகக் கிளறிவிடுங்கள். பிறகு அதை ஒரு பவுலில் எடுத்து சூடாக நன்றாக அழுத்திப் பிசையுங்கள்.
இப்போது மாவை உருண்டையாக எடுத்து, அரிசி மாவில் பிரட்டி, சப்பாத்தி போல உருட்டுங்கள். ரொம்ப மெல்லியதாகவும் இல்லாமல், தடிமனாகவும் இல்லாமல் மிதமான அளவில் தேய்க்க வேண்டும்.
இப்போது தோசைக்கல்லை எடுத்து அடுப்பில் வைத்து, மிதமான தீயில் வைத்து, அரிசி மாவில் தேய்த்த சப்பாத்தியை சுட வேண்டும். எண்ணெய் எதுவும் சேர்க்கத் தேவையில்லை. திருப்பி போட்டு நன்றாக வேக வையுங்கள். அவ்வளவுதான் அரிசி மாவில் செய்த சாஃப்ட் சப்பாத்தி தயார். இதை கையால் எப்படி அழுத்தினாலும் உடையாது. இதற்கு, சிக்கன் கிரேவி, அல்லது சன்னா கிரேவி சூப்பராக இருக்கும். உங்கள் வீட்டில் ட்ரை பண்ணி பாருங்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.