அரிசி மாவில் புசுபுசுன்னு பூரி அதுவும் எல்லோருக்கும் பிடித்த மாதிரி செப் வெங்கடேஷ் பட் ஸ்டைலில் எப்படி செய்வது என்று அவர் தனது யூடியூப் பக்கத்தில் கூறியிருக்கிறார்.
Advertisment
கோதுமை மாவில் செய்யும் பூரியை விட அரிசி மாவு பூரி மொறுன்னு சுவையாக இருக்கும்.
தேவையான பொருட்கள்:
பச்சை பட்டாணி பச்சரிசி மாவு பச்சை மிளகாய் கொத்தமல்லி தழை எண்ணெய் சீரகம் பெருங்காய்த்தூள் மிளகாய்த்தூள் சோம்புத்தூள் உப்பு பட்டர் தக்காளி மஞ்சள் தூள் கரம் மசாலா சீரகத்தூள் இஞ்சி கொத்தமல்லி தூள்
Advertisment
Advertisements
செய்முறை
முதலில் பச்சை பட்டாணியை வேகவைத்து எடுத்துக் கொள்ளவும். பின்னர் இதனை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அதனுடன் பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழை, இஞ்சி ஆகியவற்றையும் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ளவும்.
பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் சீரகம், பெருங்காயத்தூள், மிளகாய்த்தூள், சோம்புத்தூள் அரைத்து வைத்துள்ள பேஸ்ட் ஆகியவற்றை போட்டு கலந்து விடவும்.
பின்னர் தேவையான அளவு உப்பு போட்டு இரண்டு நிமிடம் கலந்து விடவும். இது கொதித்து வந்ததும் தேவையான அளவு பச்சரிசி மாவு, சிறிது உப்பு தண்ணீர் சேர்த்து மிதமான சூட்டில் கலந்து வேக விடவும்.
கட்டி விழாமல் கலந்து விட்டுக் கொண்டே இருக்க வேண்டும். பின்னர் இவற்றை எடுத்து ஆறவைத்து பூரிக்கு மாவு தேய்ப்பது போல தேய்த்து எண்ணெயில் போட்டு எடுத்தால் பூரி ரெடி ஆகிவிடும்.
பின்னர் இதற்கு பச்சை பட்டாணி குருமா எப்படி செய்வது என்று பார்ப்போம். அதற்கு ஒரு கடாய் எடுத்து அதில் பட்டர் போட்டு சீரகம், பெருங்காயத்தூள், அரைத்த தக்காளி விழுது சேர்த்து கலக்கவும்.
கொதி வர ஆரம்பித்ததும் மஞ்சள் தூள், கரம் மசாலாத்தூள், சீரகத்தூள், கொத்தமல்லி தூள், உப்பு, பச்சை மிளகாய் போட்டு கலந்து விடவும்.
நன்கு கொதி வந்ததும் தேவை என்றால் சிறிது சுகர் சேர்த்து கலக்கவும். நன்கு பேஸ்ட் மாதிரி ஆனதும் அதில் சிறிது தண்ணீர் ஊற்றி 1/2 ஸ்பூன் அரிசி மாவு சேர்த்து கலந்ததும் அது திக்காக மாறும்.
அப்போது அடுப்பை மிதமான சூட்டில் வைத்து பிரஷ் கிரீம் சேர்த்து அதில் வேக வைத்துள்ள பட்டாணியையும் போட்டு கலந்து கொத்தமல்லி தழையையும் போட்டு கொதிக்க விட வேண்டும்.
கொதி வந்ததும் மேலே சிறிது பட்டர் போட்டு இறக்கி விடலாம். அவ்வளவுதான் சுவையான அரிசி மாவு பூரி மற்றும் மசாலா ரெடியாகிவிடும்.