சாதம் வடித்து சாப்பிடவே பிடிக்காத இந்த காலத்தில் சாதத்தை குழையாமல் வடிப்பது ஒரு சாதனையாகப் பார்க்கப்படுகின்றது. குக்கரில் சமைப்பது பலருக்கு பிடிக்காது.சாதத்தை வேக வைத்து வடித்து சாப்பிட்டால்தான் பிடிக்கும் ஆனால் குழையாமல் சாதத்தை எப்படி வடிப்பது என்று பார்ப்போம்.
வடி சாதம் சமையலுக்கு தண்ணீர் அளவு எப்படி இருக்க வேண்டும் என முதலில் பார்க்கலாம். ஒரு கப் அரிசிக்கு 1 1/2 கப் தண்ணீர் போதுமானது. அரிசி நீளமாக இருந்தால் 1 3/4 கப் தண்ணீர் வைக்கலாம். சிவப்பு அரிசியானால் 2 கப் தண்ணீர் தேவைப்படும். இந்த அளவை சரியாக பின்பற்றினால் சாதம் நன்றாக இருக்கும்.
அடுத்து அடுப்பில் அதிக தீ இருக்கலாம். அதன்பிறகு மிதமான தீ வைக்க வேண்டும். குக்கராக இருக்கும் பட்சத்தில் மிதமான தீயே போதுமானது. தீ மிக அதிகமாக இருந்தால், சாதம் பக்குவமாக இருக்காது.
சில நேரங்களில் அரிசி பாதி வெந்தும் வேகாத நிலையில் இருக்கும். அதாவது, சில அரிசி நன்கு வெந்திருக்கும். சில வெந்திருக்காது. இதற்குக் காரணம் பாத்திரத்தை அடுப்பில் சரியாக வைக்கவில்லை என்பதே ஆகும். எனவே அடுப்பில் பாத்திரத்தை வைக்கும்போதே சரியாக சுற்றிலும் பொருந்தியுள்ளதா என கவனியுங்கள்.
சிலர் எப்படி பார்த்து சமைத்தாலும், சாதம் குழைந்து விடும். அதற்கு காரணம், அதிக தீயில் சாததை கொதிக்கவிடுவதே! அதோடு அடிக்கடி சாதத்தை கிளறிக் கொண்டிருக்கவும் தேவையில்லை. மிதமான தீயில் கிளறாமல் விட்டாலே சாதம் நன்கு வேகும்.
ஒருவேளை சாதம் குழைந்து விட்டால் உடனே ஒரு ஸ்பூன் எண்ணெய் அல்லது வெண்ணெய் விட்டு கிளறுங்கள். சாதம் உதிரியாக இருக்கும். சாதம் வடித்த பின்னரும் தண்ணீர் இருந்தால், அகலமான பாத்திரத்தில் கொட்டி ஆற விடுங்கள். கரண்டியைக் கொண்டு கிளற வேண்டாம்.
இப்படி செய்தும் சாதம் குழைகிறது என்றால், நீங்கள் பாத்திரத்தில் அரிசி போடும்போது சிறிது உப்பு சேர்க்க வேண்டும். அப்படி சேர்க்கும் போது எந்த அரிசியாக இருந்தாலும் சீக்கிரம் வெந்து விடும். அடுப்பில் அரிசியை போட்டு விட்டு கடை வரை சென்று வரலாம் என்று நினைத்தால் அரிசி கண்டிப்பாக குழைந்து விடும்.
எனவே அடுப்பின் அருகில் நின்று கொண்டே இருந்து அரிசியை நன்கு கவனிக்க வேண்டும். வேகும் தருவாயில் இருந்தால் வடித்து விட வேண்டும். அதிக நேரம் அடுப்பில் இருந்ததால் சதாம் குழைந்து இருக்கும் என்று நீங்கள் நினைத்தல் சாதத்தை வடித்த உடனே பாத்திரத்தை நிமிர்த்த வேண்டும். பாத்திரத்தை நன்றாக குலுக்கி பின்னர் பெரிய அகலமான பாத்திரத்தில் கொட்டி ஆற வைக்க வேண்டும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.