வீட்டிற்கு உறவினர்கள் வந்த நேரத்தில் சாப்பிட எதுவும் இல்லையா ? இனி கவலை வேண்டா அவர்கள் பாராட்டி செல்லக்கூடிய அளவிற்கு அசத்தலான ஒரு அரிசி பாயாசம் எப்படி செய்வது என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
பால்
சர்க்கரை
அரிசி
ஏலக்காய்
குங்குமப்பூ
பாதாம்
நீங்கள் எப்போதும் வீட்டில் சமைக்கும் அளவு முறையையே இதற்கும் பயன்படுத்தலாம்.
செய்முறை
அரிசியை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். அரைத்த அரிசியை 10 முதல் 15 நிமிடங்கள் ஊற வைக்கவும். பாயசம் அடிபிடிக்காமல் இருக்க, ஒரு கடாயில் சிறிது தண்ணீர் விட்டு கொதிக்க விட்டு பின் பாலையும் சேர்த்து கொதிக்க விடவும்.
இப்போது அதில் குங்குமப்பூ சேர்த்து அடி பிடிக்காமல் இருக்க தொடர்ந்து கிளறி விட்டு அப்படியே 5 நிமிடங்கள் வரை வேகவிடவும். நாம் ஏற்கனவே ஊறவைத்த அரிசியிலிருந்து தண்ணீரை வடித்து கொதிக்கும் பாலில் அரைத்த அரிசியை சேர்த்து தொடர்ந்து கிளறிக்கொண்டே இருக்க வேண்டும்.
அரிசி முழுதாக வேகும் வரை 10 முதல் 15 நிமிடங்கள் வேகவிடவும். பால் கெட்டியாகத் தொடங்கியதும் சர்க்கரையைச் சேர்த்து கரைத்து விடவும்.
சர்க்கரை முழுவதுமாக கரைந்த பிறகு, முந்திரி, திராட்சை, பாதாம், ஒரு சிட்டிகை ஏலக்காய் பொடி ஆகியவற்றை சேர்க்கவும். 2 முதல் 3 நிமிடங்கள் கொதிக்க வைத்து இறக்கினால் அரிசி பாயாசம் ரெடியாகிவிடும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“