அரிசி வேக வைத்த தண்ணீர் மிகவும் மருத்துவம் குணம் கொண்டது. குறிப்பாக இதை தலை முடி வளர்வதற்கு மட்டுமே பயன்படுத்துவோம் . ஆனால் இதில் எண்ணற்ற பயன்கள் உள்ளது.
இந்நிலையில் 2021ம் ஆண்டு நடந்த ஆய்வில் அரிசி தண்ணீரில் ஸ்டார்ச் உள்ளதால், வயிற்றுக்கு ஒரு நல்ல உணர்வை கொடுக்கும். இதனால் ஜீரண பிரச்சனைகள் குறையும். உங்களுக்கு வயிற்றுப்போக்கு அல்லது வயிறு சரியில்லை என்றால் அரிசி தண்ணீரை, சிறிது தண்ணீர் கலந்து குடியுங்கள். ஸ்டார்ச் ஒன்று சேர்க்கும் தன்மை கொண்டது. இது நமக்கு ஏற்படும் அசெளகரியத்தை குறைக்கும். குடலுக்கு தகுந்த ஆரோக்கியமான கூழலை உருவாக்கும்.
இந்நிலையில் நாம் கடுமையான உடல் நல பாதிப்பிலிருந்து மீண்டு வந்தாலோ அல்லது கடுமையான உடல் பயிற்சி செய்தாலோ நமது உடல் இழந்த நீர் சத்தை மீண்டும் உடலுக்கு வழங்க வேண்டும். அரிசி தண்ணீரில் இயற்கையான எலக்ட்ரோலைட் சீராக்கும் தன்மை உண்டு. இந்த திரவம், உடல் இழந்த நீர் சத்து, மினரல்ஸ் ஆகியவற்றை கொடுத்து உடலை காப்பாற்றுகிறது.
இந்நிலையில் இதில் வைட்டமின் பி, இரும்பு சத்து, சிங்க் மற்றும் மெக்னீசியம் உள்ளதால் இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். குறிப்பாக தொற்றுகள் மற்றும் நோய்களுக்கு எதிராக நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க தொடர்ந்து அரிசித் தண்ணீர் குடிப்பது உதவியாக இருக்கும்.
மாதவிடாய் காலங்களில் ஏற்படும் கடுமையான வயிற்று மற்றும் இடுப்பு வலிக்கு இது நிவாரணம் தரும். அரிசி தண்ணீரில் நமது தசைகளை எளிதாக சுருங்கி விரியச் செய்யும். இதன் மூலம் வலி குறைய வாய்ப்புள்ளது. கடுமையான மாதவிடாய் வலி ஏற்படும்போது, மிதமான சூட்டில் ஒரு கிளாஸ் அரிசி தண்ணீரை குடித்தால், வலியில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
இந்நிலையில் இது குறைந்த கலோரிகளை கொண்டதால், உடல் எடையை குறைக்க உதவும். மேலும் மற்ற சர்க்கரை சேர்த்த பானங்களைவிட இது மிகவும் ஆரோக்கியமானது. மேலும் இது ஒரு கிளாஸ் பருகினால் அதிகமாக பசி எடுக்காது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“