ஒரு கப் பச்சரிசி மாவில் மொறுமொறுவென்று ரிமூருக்கு எப்படி செய்வது என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
வறுத்த பச்சரிசி - 1 கப்
உப்பு - ஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
சீரகம் - அரை ஸ்பூன்
எள் - 1 ஸ்பூன்
பெருங்காயத்தூள் - சிறிது
வெண்ணெய் - ஸ்பூன்
செய்முறை
ஒரு கப் அளவிற்கு வறுத்த பச்சரிசி மாவு எடுத்துக் கொள்ளவும். அடுப்பில் ஒரு கடாயில் ஒரு கப் அளவிற்கு தண்ணீர் சேர்த்து அதில் சிறிது உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரகம், ஒரு ஸ்பூன் எள், பெருங்காயத்தூள், வெண்ணெய் சேர்த்து கலந்து கொதிவிட்டு அடுப்பை சிம்மில் வைத்து அதில் இந்த அரிசி மாவை சேர்த்து கலந்து விடவும்.
மாவு சிறிது உதிரி உதிரியாக இருக்கும் அதற்காக அதிக தண்ணீர் சேர்க்கக்கூடாது. இந்த அளவில் தான் செய்ய வேண்டும். தண்ணீர் அனைத்தும் வற்றிய உடன் இறக்கி வேறொரு பாத்திரத்திற்கு மாற்றவும். பின்னர் இதனை ஒரு ஐந்து நிமிடத்திற்கு மூடி வைத்து விடவும். இந்த மாவை சப்பாத்தி மாவு பதத்திற்கு நன்கு பிசைந்து எடுத்துக் கொள்ளவும்.
1 கப் பச்சரிசி மாவு இருக்கா? 15 நிமிடத்தில் ரிங் முறுக்கு ரெடி ! Ring Murukku in Tamil /easy snack
இதனை சிறிது சிறிதாக எடுத்து சப்பாத்தி கட்டையில் வைத்து வட்டமாக உருட்டி எடுத்துக் கொள்ளவும். பின்னர் இதனை கைகளாலேயே வட்ட வடிவமா திரட்டியும் எடுத்துக் கொள்ளலாம்.
இல்லை என்றால் முறுக்கு ஒலக்கில் ஒரு ஓட்டை இருக்க தட்டிற்கு மாற்றி அதில் பிழிந்து வட்ட வடிவமாக எடுத்துக் கொள்ளவும். பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி மீடியம் ஃப்ளேமில் எண்ணெய் கொதித்ததும் இந்த முறுக்கு போட்டு பொறித்து எடுக்கலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“