பரோட்டாவின் ஜோடி ரோட்டுக்கடை சால்னாவிற்கு என்று தனி ருசி உள்ளது. என்னதான் வீட்டில் செய்தாலும் அந்த ருசி வரவில்லை என்று கூறுபவர்களுக்கு குக் வித் கோமாளி கனி ஸ்டைலில் ரோட்டு கடை சிக்கன் சால்னா எப்படி செய்வது என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
பட்டை
ஏலக்காய்
கிராம்பு
கடல்பாசி
சோம்பு
இஞ்சி பூண்டு பேஸ்ட்
கொத்தமல்லி
புதினா
பச்சை மிளகாய்
நறுக்கிய வெங்காயம்
தக்காளி
சிக்கன்
சோம்பு
சிக்கன் மசாலா
மிளகாய் தூள்
மஞ்சள் தூள்
கொத்தமல்லித் தூள்
உப்பு
நிலக்கடலை
பொட்டுக்கடலை
முந்திரிப் பருப்பு
தேங்காய்
கசகசா
எண்ணெய்
செய்முறை
ஒரு குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, ஏலக்காய், கிராம்பு, கடல் பாசி அனைத்தையும் சேர்த்து அதில் சிறிது சோம்பு, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், புதினா, கொத்தமல்லி சேர்த்து வதக்கவும்.
அது வதங்கியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசம் நீங்கும் வரை வதக்கி அதில் நறுக்கிய தக்காளியையும் சேர்த்து வதக்க வேண்டும். பின்னர் பச்சை வாசம் நீங்கியதும் அதில் மசாலாக்களை சேர்க்கவும்.
மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா, சிக்கன் மசாலா, கொத்தமல்லித் தூள் மற்றும் உப்பு இவை அனைத்தையும் சேர்த்து கலந்து விடவும். பின்னர் இதில் சிக்கன் போட்டு மூடி போட்டு வேக வைக்கவும்.
சால்னா-ல பல விதம் இருக்கு | அதுல என் Style சால்னா செய்லாம் வாங்க | Theatre D
ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய், பொட்டுக்கடலை, நிலக்கடலை, முந்திரிப் பருப்பு, கசகசா, சீரகம் சேர்த்து சிறு தண்ணீர் விட்டு நல்ல மைய அரைத்து அந்த மசாலாக்கள் சேர்த்து போட்டு கலந்து கொதிக்க விடவும். நன்கு வதங்கியதும் அதை மூடி நன்கு வேக வைக்கவும். பின்னர் எப்போதும் போல இல்லாமல் அதில் புதிய முறையில் தாளிப்பு சேர்க்க வேண்டும்.
அதற்கு எண்ணெய் ஊற்றி அதில் சிறிது மிளகாய் தூள் சேர்த்து நிறம் மாறியதும் அதை எடுத்து குழம்பு தாளிப்பில் ஊற்றினால் நிறம் கொடுக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“