ரோட்டு கடையில் மிகவும் ஃபேமஸ் ஆக இருக்கும் பரோட்ட சால்னா இனி ஈஸியாக வீட்டிலேயே செய்யலாம். நல்ல சுவையில் ஆரோக்கியமான சால்னா செய்யும் போதே மணம் வீசும்படி எப்படி செய்வது என்று நிதாரா கிச்சன் யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பது பற்றி பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
தக்காளி
உருளைக்கிழங்கு
கொத்தமல்லி இலைகள்
புதினா இலைகள்
கறிவேப்பிலை
மிளகாய் தூள்
கொத்தமல்லி தூள்
குழம்பு மசாலா தூள்
மஞ்சள் தூள்
இஞ்சி & பூண்டு விழுது
உப்பு
வெங்காயம்
சோம்பு
முந்திரி
தேங்காய்
எண்ணெய்
செய்முறை:
முதலில், கடாயில் எண்ணெய் ஊற்றி இஞ்சி, பூண்டு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
பின்பு, வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். தக்காளி சேர்த்து மென்மையாகும் வரை சமைக்கவும்.
மிளகாய் தூள், கொத்தமல்லி தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்க்கவும். உருளைக்கிழங்கு சேர்த்து சமைக்கவும். தேங்காய், முந்திரி மற்றும் சோம்பு சேர்த்து அரைத்த விழுதை சேர்க்கவும். இதில்
தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து குருமா கெட்டியாகும் வரை கொதிக்க விடவும்.
கொத்தமல்லி மற்றும் புதினா இலைகளை தூவி பரிமாறலாம்.