என்னதான் வீட்ல சட்னி செய்தாலும் தள்ளுவண்டி கடை டேஸ்ட் வரல, அப்படி அந்த தள்ளுபடி கடை சட்னி ரகசியம் என்னவா இருக்கும்னு நிறைய முறை யோசித்து இருக்கீங்களா? அப்போ உங்களுக்கு தான் இந்த ரெஸிபி டிப்ஸ்.
தள்ளுவண்டி கடை சட்னி ரொம்ப டேஸ்டா இருக்க அதோட சீக்ரெட் ரெஸிபிதான் இது. ஒரு பத்து முதல் பதினைந்து பேருக்கு சட்டுனு சட்னி செய்யனும் அப்படினா இந்த ரெசிபியை ட்ரை பண்ணி பாருங்க.
தேவையான பொருட்கள்
எண்ணெய்
உப்பு
காய்ந்த மிளகாய்
பூண்டு
பெரிய வெங்காயம்
தக்காளி
கொத்தமல்லி தழை
மஞ்சள்தூள்
கருவேப்பிலை
இட்லி மாவு
சட்னி காரத்திற்கு ஏற்ப தேவையான அளவு காய்ந்த மிளகாயை வெதுவெதுப்பான தண்ணீரில் ஒரு 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும். ஒரு பெரிய வெங்காயம், நான்கு முதல் ஐந்து நாட்டு தக்காளி இது இரண்டையும் நறுக்கி ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து ஊறவைத்த வரமிளகாயையும் இதனுடன் சேர்த்து அரைத்து எடுத்து கொள்ள வேண்டும். சட்னி பதத்திற்கு நன்றாக மைய அரைக்கவும்.
பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, கருவேப்பிலை மற்றும் இரண்டு காய்ந்த மிளகாயை கிள்ளி போட்டு தாளித்து கொள்ளவும். அதனுடன் அரைத்து வைத்துள்ள தக்காளி தொக்கை சேர்த்து தண்ணீர் விடாமல் எண்ணெய் பிரிந்து வரும் வரை கொதிக்க வைக்க வேண்டும்.
எண்ணெய் பிரிந்து வந்ததும் அதில் தேவையான அளவு தண்ணீர், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து ஒரு 2 நிமிடம் கொதி விடவும். இப்போது தண்ணீர் சற்றி வற்றியவுடன் அதனுடன் தேவையான அளவு இட்லி மாவை சேர்த்து கலந்து விட்டு கொதிக்க வைக்க வேண்டும்.
கட்டி விழாதவாறு நன்கு கிளறி விட வேண்டும். பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விட்டு இறக்கியவுடன் கொத்தமல்லி தழைகளை தூவி பின்பு சாப்பிடலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“