கோடை காலம் வருது என்றாலே உடல் உஷ்ணம் அதிகரிக்கும். அதனால் நிறைய நோய்களும் வரும். இதிலிருந்து விடுபட டாக்டர் நித்யா மருத்துவ உலகம் யூடியூப் பக்கத்தில் கூறியிருக்கும் டிப்ஸ் பற்றி பார்ப்போம்.
Advertisment
உடலில் உஷ்ணம் அதிகரித்தால் பைல்ஸ், இன்னும் ஒரு சிலருக்கு அல்சர், கண் எரிச்சல் போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதற்கு வாய்ப்பு உண்டு. அதற்கு ஈஸியாக எளிமையான ஒரு வழிமுறை என்ன என்று பார்ப்போம்.
இதற்கு ரோஜா குல்கந்து உதவுகிறது. உடல் உஷ்ணத்தை குறைக்க இந்த ரோஜா குல்கந்தை சாப்பிடலாம். ரோஜா இதழ்கள், கற்கண்டு, தேன், வெள்ளரிவிதை, கசகசா இவை அனைத்தையும் சேர்த்து இதனை பயன்படுத்தலாம்.
ஒரு சில பெண்களுக்கு ஹீமோகுளோபின் குறைவாக இருக்கும். அவர்கள் இந்த ரோஜா குல்கந்தை பாலோடு சேர்த்து குடித்து வரலாம். குழந்தைகளுக்கும் இந்த ரோஜா குல்கந்து கொடுக்கலாம். கண்களில் ஏற்படும் வறட்சி,எரிச்சல் போன்றவை குணமாகும். உடல் உஷ்ணத்தை குறைக்க உதவும். குல்கந்து சாப்பிட முடியாதவர்கள் ரோஜா இதழ்களையும் சாப்பிட்டு வரலாம்.
Advertisment
Advertisements
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.